
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபருப்பொருளில் உள்ள துகள்களின் பண்புகளுக்கு ஏற்ப, இதனை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

பருப்பொருளின் மூன்று (திட, திரவ, வாயு) நிலைகள்
பருப்பொருளின் நிலைகள்:
- திண்மம்
- திரவம்
- வாயு
திண்மத்தில் உள்ள துகள்கள்
திண்மத்தில் உள்ள துகள்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்திருக்கும். அதனால் தான் இதற்கு, குறிப்பிட்ட வடிவம் மற்றும் பருமனளவு இருக்கும்.
Example:
கல், பாறை மற்றும் சுண்ணாம்புக்கல்
திரவத்தில் உள்ள துகள்கள்
திரவத்தில் உள்ள துகள்கள் சிறிய இடைவெளி விட்டு ஒழுங்கற்ற முறையில் அமைந்திருக்கும். அதனால், இதற்கு குறிப்பிட்ட வடிவம்கிடையாது. ஆனால், குறிப்பிட்ட பருமனளவு உண்டு.
Example:
தண்ணீர்
வாயுவில் உள்ள துகள்கள்
வாயுவில் உள்ள துகள்கள் அதிக இடைவெளியுடன், எளிதில் நகரக்கூடிய வகையில் அமைந்திருக்கும்.
Example:
காற்று

திண்மம், திரவம் மற்றும் வாயு மூலக்கூறுகள்
விரவுதல்:
விரவுதல், என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்துக்கொள்ளும் வகையில் துகள்கள் பரவும் தன்மையாகும்..
விரவுதல், பாய்மங்களான திரவம் மற்றும் வாயுவில் நடைபெறும். ஏனென்றால், அந்த நிலையில் துகள்கள் எளிதாக நகரும் தன்மை கொண்டுள்ளன.

விரவுதல்