PDF chapter test TRY NOW
இரண்டு வகையான விசைகள் உள்ளன, அவையாவன,
- தொடுவிசை
- தொடாவிசை
தொடுவிசை
தொடுவிசை என்பது இரண்டு பொருள்களுக்கு இடையே தொடர்பு கொள்ளும் போது செயல்படுத்தப்படும் ஒரு விசை ஆகும்.
ஒரு பந்தை உதைத்தல், உங்கள் பள்ளிப் பையைத் தூக்குதல், கதவைத் திறப்பது போன்றவை ஆகும்.
பந்தை உதைக்கும் பொழுது
தொடாவிசை
தொடாவிசை என்பது ஒரு பொருளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் செயல்படுத்தப்படும் விசையாகும்.
ஒரு காந்தம் மற்றும் சில இரும்பு துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். காந்தத்தின் அருகே இரும்பு துண்டுகளை வைக்கவும். என்ன நடக்கும்?
காந்தத்தின் விசையால் இரும்பு துண்டுகள் ஈர்க்கப்படுகின்றன. ஆனால், இங்கு அவைகளுக்குள் நேரடி தொடர்பில்லை.
காந்தத்தின் விசையால் இரும்பு துண்டுகளை ஈர்த்தல்
முதிர்ந்த தேங்காய் தரையில் விழுகிறது. அதை தரைக்கு இழுப்பது எது?
பூமியின் "ஈர்ப்பு விசை" பற்றி கேள்விப்பட்டிருப்போம். புவியீர்ப்பு விசையானது முதிர்ந்ததேங்காயை மரத்திலிருந்து தரைக்கு இழுக்கிறது.
Example:
புவியீர்ப்பு விசை, காந்த விசை.
அறிந்து கொள்!
பண்டைய இந்திய வானியலாளர் ஆரியபட்டா, "ஆற்றில்மெதுவாக மிதக்கும் ஒரு நபருக்கு ஆற்றின் கரைகள் எப்படி பின்புறம் எதிர்த்திசையில் செல்வது போல் தோன்றுகிறதோ, அதைப்போலவே, வானில் உள்ள நட்சத்திரங்களை நாம் காணும் போது அவை கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாகத் தோன்றும். அதனால், நிச்சயம் நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகத்தான் சுற்ற வேண்டும்" என்று கூறினார்.
பொருட்கள் எப்படி நகரும்?
நாம் ஒரு பந்தை உதைக்கும்போது அது நகரும். நாம் புத்தகத்தை மேசையில் தள்ளும்போது, அது நகரும். காளை மாடு இழுத்தால் வண்டி நகரும்.
ஒரு காரணியால் பொருள் இழுக்கப்படும்போது அல்லது தள்ளப்படும்போது இயக்கம் ஏற்படுகிறது.
அன்றாட வாழ்வில், வாளியைக் கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியே எடுக்கிறோம், விலங்குகள் வண்டியை இழுக்கிறது. இங்கு இழுத்தல் மற்றும் தள்ளுதல் என்ற நிகழ்வானது, மனிதர்கள் அல்லது விலங்குகள் போன்ற உயிருள்ள காரணிகளால் நிகழ்கிறது.
விலங்குகள் மற்றும் பறவைகள் மூலம் விதை பரவல்
சில நேரங்களில் புல்வெளியில் ஒரு உயரமான புல் காற்றில் நடனமாடுவதைப் பார்க்கிறோம், ஒரு மரத்துண்டு ஓடையில் நகர்கிறது. எது அவைகளைத் தள்ளுகிறது அல்லது இழுக்கிறது?
வீசும் காற்றும், ஓடும் நீரும் தான் காரணம் என்பதை நாம் அறிவோம். சில நேரங்களில் தள்ளுதல் அல்லது இழுத்தல் என்ற நிகழ்வானது உயிரற்ற காரணிகள் காரணமாகவும் நிகழலாம்.
இயக்கத்தை பாதிக்கும் காரணிகள்:
- உயிருள்ள காரணிகள்
- உயிரற்ற காரணிகள்
உயிருள்ள காரணிகள்:
Example:
விலங்குகள் மற்றும் பறவைகள் மூலம் விதை பரவல்.
உயிரற்ற காரணிகள்:
காற்றின் மூலம் இலைகளின் இயக்கம்
Example:
காற்றின் மூலம் இலைகளின் இயக்கம். மரத்தில் இருந்து விழும் பழம்.