PDF chapter test TRY NOW

ஒரு செல் உயிரினங்கள் பொதுவாக நுண்ணிய, வெறும் கண்களால் பார்க்க முடியாத நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடிந்த மிகச் சிறிய உயிரினங்கள் ஆகும். அவை பெரும்பாலும் நீர் வாழ்வன மற்றும் எளிமையானவை, மேலும் அனைத்து விலங்குகளுக்கும் முதன்மையான  உயிரினமாய் திகழ்கின்றன.
 
ஒரு செல் உயிரின வகையில் ஒரு செல் மட்டுமே காணப்படுவதால் பல்வேறு உடற் செயல்களான சுவாசித்தல், செரிமானம், உறிஞ்சுதல், வெளியேற்றுதல், வளர்ச்சி போன்ற அனைத்து வாழ்க்கை செயல்முறைகளையும், உடலான ஒரு செல்லே செய்கிறது. அதைச்  செய்யும் வகையில் அவ்வகை உயிரிகளில் சில சிறப்பு நுண்ணுறுப்புக்களை பெற்றிருக்கின்றன.
அமீபா:
அமீபா ஒரு ஒற்றை உயிரணு என்பதை நாம் ஏற்கெனவே அறிந்து கொண்டோம். ஒரு செல் உயிரினம் பெரும்பாலும் குளங்கள், மெதுவாக நகரும் ஆறு மற்றும் ஏரிகளில் காணப்படும். அதற்கு உறுதியான வடிவம் இல்லை. இது செரிமானம், சுவாசம், இடப்பெயர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறது.
  • அமீபா தண்ணீரில் இருக்கும் உணவை விழுங்குகிறது, மேலும் விழுங்கப்பட்ட உணவு, உணவுக் குமிழ் உதவியால்  செரிமானம் அடைகிறது. உணவுச் செரிக்கப்பட்ட பின் கழிவுகள் சுருங்கும் நுண் குமிழ்கள் மூலமாக வெளியேற்றப்படுகின்றன.
  • சுவாசித்தல் எளிய பரவல் மூலம் உடலில் மேற்பரப்பில் நடைபெறுகிது.
  • அமீபாவில் சூடோபோடியா (pseudopodia)உள்ளது, அவை விரல் போன்ற நீட்சிகளாகும். இடப்பெயர்ச்சி, இயக்கம் மற்றும் இரையைப் பிடிக்கும் கருவியாகவும் இவை திகழுகின்றன. சூடோபோடியா பொய்க் கால்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அமீபாவில் சைட்டோபிளாஸத்தை  2 அடுக்குகளாகக் காணலாம், அவை வெளிப்புற எக்டோபிளாசம் மற்றும் உட்புற எண்டோபிளாசம். மேலும் இரட்டை அடுக்குகளால்  ஆன உயிரணு சவ்வு, கரு மற்றும் நியூக்ளியோலஸ் உள்ளது.
 
Design - YC IND (2).png
அமீபா
பாரமீசியம்:
இது நீரில் வாழும் ஒரு செல் உயிரினமாகும். இது பொதுவாகச் செருப்பு வடிவ அல்லது நீள்வட்ட வடிவ உயிரினமாகும். சிலியா எனப்படும் குறு இழைகளின் உதவியுடன் பாரமீசியம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடப்பெயர்ச்சி செய்கின்றன.
 
Design - YC IND (4).png
பாரமீசியம்
யூக்ளீனா:
யூக்ளீனா என்பது நன்னீர் மற்றும் உப்பு நீரில் வாழும் ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினமாகும். இவை விலங்கு மற்றும் தாவர பண்புகளைக் கொண்டுள்ளன.
  • யூக்ளீனா சாட்டை அல்லது வால் போன்ற ஃபிளாஜெல்லத்தைப் பயன்படுத்தி நகர்கிறது.
  • யூக்ளீனா குளோரோபிளாஸ்ட்டின் உதவியால் ஒளிச்சேர்க்கை செய்வதன் மூலம் தன் உணவைத் தானே உற்பத்தி செய்கிறது.
 Design - YC IND (3).png
யூக்ளீனா