PDF chapter test TRY NOW
யானைகள், புலிகள் மற்றும் ஒட்டகங்கள் நிலத்தில் வாழ்பவை. ஆனால், மீன் மற்றும் நண்டுகள் தண்ணீரில் மட்டுமே வாழ்கின்றன. பூமியில் உள்ள புவியியல் அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் இடத்திற்கு இடம் வேறுபட்டுக் காணப்படுகின்றன.
வாழ்விடம் என்பது தாவரம் அல்லது விலங்கு வாழும் இடம் அல்லது சூழல் ஆகும் .

வாழ்விட வகைகள்
வாழ்விடம் உணவு, நீர், காற்று, தங்குமிடம் மற்றும் உயிரினத்திற்குத் தேவையான பிற தேவைகளை வழங்குகிறது. பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஒரே வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
1.ஒட்டகம் எந்த சூழ்நிலையிலும் வாழ முடியும் என்றாலும், பாலைவனப் பிரதேசம் அவை வாழ்வதற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.

ஒட்டகம்
2.துருவக் கரடி மற்றும் பென்குவின்கள் குளிர் பிரதேசத்தில் வாழ்கின்றன.

பென்குவின்கள்
இத்தகைய கடுமையான சூழ்நிலைகளை எதிர் கொண்டு இவ்வகை உயிரினங்கள் வாழவும், இனப்பெருக்கம் செய்து சிறந்து விளங்கவும் சில சிறப்பு தகவமைப்புகள் தேவை. ஒரு உயிரினம் வாழும் அல்லது வசிக்கும் இடம் அதன் வாழ்விடமாக அறியப்படுகிறது.
ஒரு விலங்கு அல்லது தாவரத்தில் காணப்படும் சில குறிப்பிட்ட அம்சங்கள் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் அவற்றை வாழ வைக்க உதவுகிறன்றன, இவற்றைத் தகவமைப்புகள் என்கிறோம்.
உயிரினங்கள் அவை வாழும் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்கின்றன. ஏனெனில், அவை சிறப்பு தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. இந்தச் சிறப்பு தகவமைப்புகளின் வளர்ச்சியானது, மரபணு மாற்றத்தால் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் விளைவாகும். இந்தத் தகவமைப்புகள் அவை உயிர்வாழ்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உதவுகின்றன.
Important!
சிங்கப்பூர் ஜூராங் பறவைகள் பூங்காவில், பென்குவின் வகைப் பறவைகள் பனிக்கட்டிகளால் நிரப்பப் பட்ட ஒரு பெரிய கண்ணாடி கூண்டுகளில் 0° C மற்றும் அதற்கும் குறைவான வெப்பநிலைகளில் பராமரிக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் ஜூராங் பறவைகள் பூங்கா