
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoImportant!
தாமரையின் இலைக் காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் (Air spaces) அவை நீரில் மிதக்க உதவுகின்றன.


காற்றறைகள்
2. கடல் நீர் வாழிடம்
- புவியின் \(70\) சதவீதம் கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது. பல்வேறு தாவரங்களையும், விலங்குகளையும் பெருங்கடல்கள் கொண்டுள்ளன.
- பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் \(40\) சதவீதம் கடல்வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது.


கடல் நீர் வாழிடம்
Example:
கடல் பாசிகள், கடல் புற்கள், சதுப்பு நிலப் புற்கள் மற்றும் தாவர மிதவைகள் (தனித்து நீரில் மிதக்கும் பாசிகள்) போன்றவை கடல்வாழ் தாவரங்களாகும்.
Important!
- இந்தியாவின் மிக நீளமான நதி கங்கை நதியாகும். \(2500\) கி.மீ. நீளம் உடையது.
- உலகின் மிக நீளமான நதி நைல் நதியாகும். \(6650\) கி.மீ. நீளம் உடையது.
- ராட்சத கெல்ப் (Giant kelp) எனப்படும் கடற்பாசி, \(30\) மீட்டர் வரை வளரும் மிகப் பெரிய பாசி ஆகும்.