PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
செல்லில் உள்ள பல்வேறு பல்வேறு பாகங்கள் குறித்தும் அவற்றின் முக்கியப் பணிகள் குறித்தும் பின்வருமாறு காணலாம்.
 
செல் சுவர் (பாதுகாப்பு உறை)
  • செல்லைப் பாதுகாக்கும், செல்லுலோஸினால் உருவாக்கப்பட்டது. 
  • உறுதி மற்றும் வலிமை தருகிறது.
  • தாங்குபவர் அல்லது பாதுகாப்பவர் என்ற சிறப்புப் பெயர் கொண்டது.
செல் சவ்வு
  • செல்லைப் பாதுகாக்கும் சவ்வு ஆகும்.
  • இது, செல்லின் போக்குவரத்திற்கு உதவும்.
  • செல்லின் கதவு என்ற சிறப்புப் பெயர் கொண்டது.
சைட்டோபிளாசம்
  • செல்லின் உள்ளே ஜெல்லி (அ) நீர் போன்ற நகரும் பொருள் உள்ளது.
  • செல்லின் நகரும் பகுதி ஆகும்.
  • செல்லின் நுண்ணுறுப்புகள் இங்கே அமைந்து உள்ளன.
மைட்டோகான்ட்ரியா
  • செல் செயல்படத் தேவையான சக்தியை உருவாக்கித் தருகிறது.
  • செல்லின் ஆற்றல் மையம் எனப்படும்.
பசுங்கணிகம்
  • இதில் உள்ள நிறமி "பச்சையம்" ஆகும்.
  • சூரிய ஒளியில் இருந்து தாவரத்தின் உணவு தயாரிக்க உதவுகிறது.
  • செல்லின் உணவு தொழிற்சாலை என்பது இதன் சிறப்புப் பெயர் ஆகும்.
நுண்குமிழிகள்
  • உணவு, நீர், வேதி பொருட்களைச் சேமிக்கிறது.
  • சேமிப்பு கிடங்கு ஆகும்.
உட்கரு (நியுக்லியஸ்)
  • இது, செல்லின் மூளை ஆகும்.
  • செல்லின் செயல்கள் அனைத்தும் இதனால் தான் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • மேலும், இது செல்லின் கட்டுபாட்டு மையம் என அழைக்கப்படுகிறது.
உட்கரு உறை
  • நியுக்லியஸைச் சுற்றி இருந்து பாதுகாக்கின்றது.
  • நியுக்லியஸ் உள்ளேயும் வெளியேயும் பொருட்களை அனுப்புகின்றது.
  • உட்கரு வாயில் அல்லது உட்கரு கதவு எனப்படும்.