PDF chapter test TRY NOW
இப்பகுதியில் காந்தத்தன்மை பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை எப்போதாவது இழக்குமா?
ஆம். காந்தம் தன் தன்மையை சில சமயங்களில் இழந்து விடும்.
எப்போது இழக்கும்?
காந்த தன்மையை இழப்பதற்கான சில முக்கிய காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
வெப்பப்படுத்துவதால் காந்தம் தன் தன்மையை இழக்கும்.
காந்தத்தை வெப்பப்படுத்துதல்
உயரத்திலிருந்து கீழே போட்டால் காந்தம் தன் காந்த தன்மையை இழக்கும்.
காந்தம் தூக்கி எறிதல்
சுத்தியால் தட்டினால் காந்தம் தன் காந்த தன்மையை இழக்கும்.
காந்தத்தை சுத்தியலால் தட்டுதல்
Important!
கைபேசி, குறுந்தகடு, கணினி போன்ற பொருள்களுக்கு அருகில் காந்தங்களை வைப்பதால் காந்தம் அதன், காந்தத்தன்மையை இழக்க நேரிடும். அந்தப் பொருள்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
காந்த திசைகாட்டியை உருவாக்குவோமா?
- காந்தமாக்கிய காந்த ஊசியில் இரண்டு தெர்மோகோல் பந்தை செருக வேண்டும்.
- அதை குவளையில் உள்ள தண்ணீரில் மிதக்கும்படி செய்ய வேண்டும்.
ஊசி வடக்கு - தெற்கு திசையில் ஓய்வு நிலைக்கு வருகிறதா?
ஆம்.
இவை பொதுவாக வடக்கு தெற்கு திசையிலே ஓய்வுக்கு வரும்.
தெர்மாகோல் ஊசியில் செருகி மிதக்க வைத்தல்
தெர்மாக்கோல் பந்து இல்லை எனில் காய்ந்த இலையோ, கார்க் துண்டையோ உபயோகிக்கலாம்.