PDF chapter test TRY NOW

இப்பகுதியில் காந்தங்களைக் கொண்டு திசையை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
ஒரு சட்டகாந்தத்தின் மத்தியில் ஒரு நூலைக் கட்டி அதனைத் தொங்க விட வேண்டும். காந்தம் ஓய்வுக்கு வரும் திசைக்கு இணையாக, அதாவது சட்டகாந்தத்திற்கு இணையாக ஒரு கோட்டினை வரைந்து அதன் திசையை குறித்துக் கொள்ள வேண்டும். மீண்டும் காந்தத்தை மெதுவாகத் திருப்பி மறுபடியும் அது ஓய்வு நிலைக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
 
இதுபோல் மூன்று அல்லது நான்கு முறை மறுபடியும் செய்ய வேண்டும். தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் வடக்கு தெற்கு திசையிலேயே ஓய்வு நிலைக்கு வரும்.
 
வடக்கே நோக்கும் முனை காந்தத்தின் வடதுருவம் என்றும் , தெற்கே​ நோக்கும் முனை காந்தத்தின் தென்துருவம் என்றும்  அழைக்கப்படும்.
 
4.svg
நூலால் கட்டி தொங்கவிடப்பட்ட சட்டகாந்தம்
 
காந்தத்தின் திசைகாட்டும் பண்பு பல ஆண்டுகளாக திசையைக் கண்டறிய பயன்பட்டு வருகிறது. ஏறத்தாழ \(800\) ஆண்டுகளுக்கு முன்பு, சீனர்கள் காந்த கற்களைக் கட்டி தொங்கவிட்டால், அவை வடக்கு -தெற்கு திசையிலேயே ஓய்வு நிலைக்கு வருவதைக் கண்டறிந்தனர்.
  
51.png
திசை காட்டி மூலம் திசை அறிந்து செல்லும் கப்பல்
 
காந்தத்தன்மையுடைய கற்களைக் கொண்டு திசைகாட்டும் கருவிகள் செய்து பயன்படுத்தினர். சீன மாலுமிகள் தங்கள் படகுகளிலும் கப்பல்களிலும் இத்தகைய கற்களைக் கொண்டு, புயல் காலங்களிலும், மூடுபனி காலங்களிலும் திசையையறிந்து பாதுகாப்பான கடல் பயணங்களை மேற்கொண்டனர்.
 
காந்த திசை காட்டும் கருவி:
காந்த திசைகாட்டும் கருவி என்பது திசை கண்டறிய பயன்படும் ஒரு காந்த ஊசிப்பெட்டியாகும்.
காந்த ஊசிப்பெட்டியில் தடையின்றி தானே சுழலும் வகையில் ஒரு காந்த ஊசி இதன் மையத்தில் பொருத்தப்பட்டு இருக்கும். காந்த ஊசியின் வட முனை குறியிடப்பட்டு இருக்கும்.
 
compass43569001280pngpngpngpng.png
திசைகாட்டும் கருவி
 
கப்பல்கள் மற்றும் விமானங்களில் காந்த திசைகாட்டும் கருவி பொதுவாக பயன்படுத்தப்படும். மேலும் மலையேறுபவர்கள் தாங்கள் திசைமாறி வேறு இடத்திற்குச் செல்லாமல் இருக்கவும்  திசை காட்டும் கருவியை அவசியம் எடுத்துச் செல்கின்றனர்.