PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மனித உடல் செயல்பாட்டில் நீரின் பங்கு
  1. நீர் மனித உடலின் அனைத்து உயிரியல் திசுக்களின் ஒரு பகுதியாகும்.
  2. உடலியக்கச் செயல்பாடுகளை நிகழ்த்தவும், உடல் வெப்பநிலையை சீராகப் பாதுகாக்கவும், உடலில் உள்ள உறுப்புகள், திசுக்கள் மற்றும் செல்கள் நன்கு செயல்படவும் நீர் மிகவும் அவசியம் ஆகும்.
  3. மனித உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு நாள் ஒன்றிற்கு சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் தேவைப்படுகிறது.
  4. உணவு செரிப்பதற்கும், உடலில் இருந்து கழிவுப் பொருள்களை வெளியே அனுப்புவதற்கும் நீர் அவசியமாகும்.
  5. நீர் உடல் எடையில் சுமார் 60 - 70% ஆகும்.
பல்வேறு திசுக்கள் மற்றும் உறுப்புகளில் உள்ள நீரின் அளவை பின்வரும் விளக்கப் படத்தின் மூலம் குறிக்கப்படுகிறது.
 
YCIND25052022_3807_Water_TM1.png
 
வீடுகளில் நீர் பயன்பாடு
 
மனிதர்கள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியமாகும். அதேபோல் நாம் செய்யும் ஒவ்வொரு பணிகளுக்கும் நீரின் தேவை முக்கியமாக பயன்படுகிறது.
Example:
சமைத்தல்
குளித்தல்
துணிகளைத் துவைத்தல்
பாத்திரங்களைக் கழுவுதல்
வீடுகளையும் பொது இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க
தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுதல்
விவசாயம்
 
ஒரு நாட்டின் முதுகெலும்பு வேளாண்மையாகும். அதேபோல் உலகின் மேன்மையான தொழில் விவசாயம் ஆகும். மேலும் விவசாயம் செய்ய நீர் முக்கிய தேவையமாக உள்ளது.
Example:
கால்நடை வளர்ப்பு
பயிர் உற்பத்தி செய்தல்
விவசாய பொருள்கள் தயாரிப்பு
பண்ணைப் பொருள்கள் தயாரிப்பு
தொழில்துறை
  
ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி தீர்மானிப்பது அந்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் ஆகும். அதேபோல் ஒரு தொழிற்சாலைகள் நடைபெற நீர் முக்கிய தேவையமாக உள்ளது.
Example:
  • நீர் தொழிற்சாலைகளில் பொருள்கள் தயாரிப்பின் அனைத்து செயல்முறைகளிலும் பயன்படுகிறது.
  • பொருள்கள் தயாரிப்பியில் மூலப்பொருளாகவும்,கரைப்பானாகவும் நீர் பயன்படுகிறது.  
  • மின்சார உற்பத்தியிலும் நீர் பயன்படுகிறது.
குறிப்பு:
 
ஈரப்பதம் நிறைந்த காடுகள் என்பது சதுப்பு நிலங்கள் என்று அழைக்கப்படும். அவை கடல் கரைகளிலோ அல்லது பெரிய ஆறுகளைச்  சார்ந்தோ அல்லது பெரிய ஏரிகளின் கரைகளிலோ காணப்படும். அது நன்னீராகவோ, உவர்ப்பு நீராகவோ அல்லது கடல் நீராகவோ சதுப்பு நில நீர் காணப்படும். சதுப்பு நிலங்கள் உயிரினங்களுக்கு நன்னீரையும், ஆக்ஸிஜனையும் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள்
  • சிதம்பரத்தினை அடுத்த பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள்
  • திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள சதுப்பு நிலக்காடுகள்
  • சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம்
  • காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் சதுப்புநிலம்