PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
i. திண்ம நிலை (பனிக்கட்டி)
 
நீரானது வெப்பநிலை குறையும் போது தனது நீர்ம (திரவ) நிலையிலிருந்து திண்ம நிலைக்கு செல்லும். இவ்வாறு நீர் உறையும் போது உருவாகும் திண்மப் பொருள் பனிக்கட்டி ஆகும்.
 
இது ஒளி ஊடுபுகுவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுகா விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். துருவங்களில் உள்ள பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளில் நீர் உறைந்த நிலையில் காணப்படும்.
 
பூமியில் உள்ள மொத்த நீரில் பெருமளவு, அதாவது 68.7% உறைந்த நிலையில் காணப்படுகிறது.
 
பனிக்கட்டி உயரமான மலைகளிலும் பனிப்பாறைகளிலும் துருவப்பிரதேசங்களிலும் காணப்படுகிறது மற்றும் மூடுபனியாகவும் உள்ளது.
 
matterhorn30194291280.jpg
பனிப்பாறை
 
ii. திரவ நிலை (நீர்)
 
திரவ நிலையில் உள்ள  நீர் ஆதரங்களானது தாவரங்கள் மற்றும் நீர் வாழ்  உயிரினங்களின் இருப்பிடமாகவும் திகழ்கின்றது.
 
திரவ நீர் நிலைகளான கடல்கள், ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் ஆகிய மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடியில் உள்ள நீரும் திரவ நிலையில் காணப்படுகிறது.
 
wave54738691280w1278w1278.jpg
கடல்
 
iii. வாயு நிலை (நீராவி)
 
நம்மைச் சுற்றி காணப்படும் காற்றில் நீராவி வாயுநிலையில் காணப்படுகிறது.பெருங்கடல்களில் இருந்து நீர் வாயு நிலையில் (நீராவி) ஆவியாகி வளிமண்டலத்தை அடைந்து  பின் குளிரந்து நீர்துளிகளாகி மழையாகப் பொழிகிறது.
 
பெருங்கடல்கள் மற்றும் கடல்களில் இருந்து அதிக அளவு நீர் (86%) ஆவியாகிறது.
 
நீரின் ஆவியாகும் பண்பே இயற்கையில் நீர் சுழற்சி நடைபெற அடிப்படை காரணம் ஆகும். 
 
shutterstock662161621.jpg
காற்று