PDF chapter test TRY NOW
1. இப்படத்திலிருந்து நீ அறியும் நிகழ்வு எது? விளக்குக
மேற்காட்டிய படத்தில் பல வகையான கழிவுகள் ஒன்றாக திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது. திறந்த வெளிக் குப்பையில் எரிகிறது. இதனால் , பைப்புகள், காலணிகள் போன்றவை எரிந்து ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய புகை மற்றும் நச்சுப் பொருள்களைச் சூழ்நிலை மண்டலத்தில் சேர்த்து அதை மாசுப்படுத்தும். வேதிப் பொருட்கள் கலந்த இக்காற்றை உயிரினங்கள் சுவாசிக்கின்றன. குப்பைகள் எரிவதால் உருவாகும் சாம்பல் துகள்கள் நிலத்தை மாசுப்படுத்துகின்றன.
மழை பெய்யும் போது சில அபாயகரமான நச்சுக்கள் நீருடன் கலந்து நிலத்திற்குள் செல்லுகின்றன. நிலத்தடி நீருடனும் கலக்கின்றன. நெகிழிப்பைகள் மழை நீரை நிலத்திற்கடியில் செல்ல விடாமல் தடுக்கின்றன. இதனால் சிறிய குட்டைகளில் உள்ள நீரில் நெகிழிக் கிண்ணங்கள், டயர்கள் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி மற்றும் மலேரியா நோய்களைப் பரப்புகின்றன.
2. குப்பைக் குழிகளில் நிகழும் மாசுபாடுகள் யாவை?
- காற்று மாசுபாடு
- நீர் மாசுபாடு