PDF chapter test TRY NOW
அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்காரத் தாவரங்கள் எனப்படும். ஒரு குறிப்பிட்ட தாவரங்களில் இருந்து மலர்களை நாம் பெறுகிறோம். இத்தகைய மலர்களை வளர்ப்பது மலர் வளர்ப்பு தோட்டக்கலையின் முக்கியப் பகுதியாக செயல்படுகிறது.
Example:
மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, கார்னேஷன், ஜெர்பரா
மேலும் வீடுகள், தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற அனைத்து இடங்களிலும் அழகாக காட்சி படுத்த அனைத்து வகையான அலங்காரத் தாவரங்களும் வளர்க்கின்றன.
எந்தெந்த அலங்காரத் தாவரங்கள் வளர்க்கப்படுகிறது என்பதை பின்வருமாறு காணலாம்:
i. செம்பருத்தி, நந்தியாவட்டை, குரோட்டன்ஸ் போன்றவை பெரிய செடி வகைகள் ஆகும்.

செம்பருத்தி
ii. முல்லை, அலமான்டா, காகிதப்பூ போன்றவை கொடி வகைகள் ஆகும்.

காகிதப்பூ
iii. டிலோனிக்ஸ் மரம் (காட்டுத்தீ) ஆகிய மரவகை ஆகும்.

காட்டுத்தீ
உங்கள் பகுதியில் என்னென்ன அலங்காரத் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன?
செம்பருத்தி, நந்தியாவட்டை, குரோட்டன்ஸ், முல்லை, காகிதப்பூ, மந்தாரை போன்ற அனைத்து வகையான அலங்காரத் தாவரங்களும் வளர்க்கப்படுகிறது.
Reference:
https://www.flickr.com/photos/guojerry/7267496528