PDF chapter test TRY NOW
இப்பகுதியில் வன்பொருள் (HARDWARE) பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
நீங்கள் இதை சிந்தித்தது உண்டா? கணினியில் எவை எவை வன்பொருள் என்று?
கணினியில் நம் கண்களால் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருள்களே ஆகும்.
நாம் காணும் சில வன்பொருள்கள் (HARDWARES) கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகள் முறையே,
- உள்ளீட்டு (INPUT) கருவிகள்
- வெளியீட்டு (OUTPUT) கருவிகள்
- கணினியின் மையச்செயலகப் பெட்டியினுள் (CPU Cabinet) அமைந்திருக்கும் நினைவகம் (Hard Disk)
- தாய்ப்பலகை (MOTHER BOARD)
- SMPS
- CPU
- RAM
- CD DRIVE
- GRAPHICS CARD
உள்ளீட்டு (INPUT):
உள் கணினி அமைப்புடன் வெளிப்புற சூழலை இணைக்க உள்ளீடகம் பயன்படுத்தப்படுகிறது. இது கணினி அமைப்புக்கு தரவு மற்றும் தகவல்களை வழங்குகிறது.

வெளியீட்டு (OUTPUT) கருவிகள்:
கணினியின் உள் அமைப்பை வெளிப்புற சூழலுடன் இணைக்க இது பயன்படுகிறது. இது மனிதனால் படிக்கக்கூடிய வடிவத்தில், எந்தவொரு கணக்கீடு அல்லது வழிமுறைகளின் முடிவுகளை விரும்பிய வடிவத்தில் தகவல்களாக வெளி உலகிற்கு வழங்குகிறது.

நினைவகம் (Hard Disk):

நினைவகம்
தாய்ப்பலகை (MOTHER BOARD)
தாய்ப்பலகை என்பது, ஒரு கணினியின் முதன்மை பகுதி ஆகும். இது கணினியின் உள் பகுதிகளான CPU, RAM , CD DRIVE மூலம் இணைக்கப்பட்ட எந்த ஒரு சாதனங்களையும் இணைக்கும் (IC)ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்ட பலகை ஆகும்.

தாய்ப்பலகை
(SMPS):
இது மின்சுற்றில் உள்ள (AC) மின்னோட்டத்தை மாற்றி கணினிக்கு இயங்குவதற்கு தேவையான (DC)மின்னோட்டத்தை வழங்கும் சாதனம் ஆகும்.

SMPS