PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒழுங்கற்ற வடிவிலான திடப்பொருட்களின் கன அளவு:
ஒழுங்கற்ற வடிவிலான திடப்பொருட்களின் கன அளவைக் கணக்கிட சரியான சூத்திரம் இல்லை. ஆனால் அவற்றைக் கணக்கிட சில முறைகள் உள்ளன. கன அளவு என்பது, ஒரு பொருளால் ஆக்கிரமிக்கப்பட்ட மொத்த இடம் என்பதால், ஒரு சிறிய ஒழுங்கற்ற கல் துண்டின் அளவை நீர் இடப்பெயர்ச்சி முறை மூலம் காணலாம்.
நீர் இடப்பெயர்ச்சி முறை:
அளவுகள் குறிக்கப்பட்ட உருளை வடிவக் குவளை மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கன அளவு தீர்மானிக்கப்படுகிறது.
அளவிடும் சிலிண்டர்
1. அளவுகள் குறிக்கப்பட்ட உருளை வடிவக் குவளையை 150 மில்லி தண்ணீரால் நிரப்பவும்.
2. ஒரு கல் போன்ற ஒழுங்கற்ற திடப்பொருளை நூல் துண்டுடன் கட்டி, முற்றிலும் தண்ணீரில் மூழ்கும் படி செய்யவும்.
3. இறுதியில் கல் மூழ்கும்போது, நீரின் அளவு அதிகரிக்கும்.
4. ஒழுங்கற்ற கல் சிலிண்டரின் உள்ளே இருக்கும் நீரின் இடத்தை ஆக்கிரமித்து ஓரளவு தண்ணீரை இடமாற்றம் செய்யும். இதனால் நீர் மட்டம் உயரும்.
அனுமானம்
இடம்பெயர்ந்த நீரின் அளவு, கொள்கலனில் கல்லால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் அளவிற்கு சமமாக இருக்கும். ஆர்க்கிமிடிஸால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நுட்பம் நீர் இடப்பெயர்ச்சி முறை என்று அழைக்கப்படுகிறது.
கல்லால் இடம்பெயர்ந்த நீரின் அளவு:
ஆரம்பத்தில் நீரின் கன அளவு \(150\) மில்லி லிட்டர் என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு கல்லை மூழ்கடித்த பிறகு, நீர் மட்டம் 180 மில்லிக்கு உயரும் என்று கற்பனை செய்து பாருங்கள். பிறகு:
இடம்பெயர்ந்த நீரின் கன அளவு \(= 180\) மி.லி \(- 150\) மி.லி \(= 30\) மி.லி.
\(1\) மி.லி \(= 1\) செ.மீ³.
\(30\) மி.லி \(= 30\) செ.மீ³.
வாயுவின் கன அளவு:
திரவங்களைப் போலவே, வாயுக்களும் அவை வைக்கப்படும் கொள்கலனை நிரப்புகின்றன. இருப்பினும், வாயுக்களை சுருக்கலாம், குறைந்த இடத்தில் நிரப்பலாம். எல்பிஜி எரிவாயு சிலிண்டர் ஒரு உதாரணம். எனவே, வாயுவின் அளவைக் கணக்கிடுவது திடப்பொருட்கள் மற்றும் திரவங்களின் அளவிலிருந்து வேறுபட்டது.
திரவங்கள் மற்றும் வாயுக்களை லிட்டர், கன மீட்டர் அல்லது கன மீட்டரில் வெளிப்படுத்தலாம்.
\(1\) கன மீட்டர் \(= 1\) கிலோலிட்டர் \((kL)\)
\(1\) கன சென்டிமீட்டர் \(= 1\) மில்லிலிட்டர் \((mL)\)
\(1\) கன மில்லிமீட்டர் \(= 1\) மைக்ரோலிட்டர் \((µL)\)
Important!
திரவத்தை அளவிடுவதற்கான மிகச்சிறிய அலகு ஒரு மைக்ரோலிட்டர் \((µl)\) ஆகும்.
\(1\) லிட்டர் \(l = 1000000\) \(µl\).
சிந்தித்து விடையளியுங்கள் !
பார்வையைக்கொண்டு எந்த கொள்கலனில் அதிகத் தண்ணீர் இருக்கிறது, என்று யூகிப்பது எளிதல்ல. பொதுவாக, அளவுகள் குறிக்கப்பட்ட உருளை வடிவக் குவளைகள், கொள்கலன்கள், பீக்கர்கள், பிப்பெட்டுகள் மற்றும் பியூரெட்டுகள் திரவத்தின் அளவை அளவிட பயன்படுகின்றன.
நீரால் நிரப்பப்பட்ட பல்வேறு வகையான கொள்கலன்கள்
இந்த நிலையில், நீரின் அளவை அளக்க பீக்கர்களைப் பயன்படுத்துவோம்.
பீக்கர்
முதல் கொள்கலனில் உள்ள திரவம் ஒரு பீக்கரில் ஊற்றப்பட்டு, அளவு எடுக்கவும். மற்ற கொள்கலன்களுக்கும் இதே செயல்முறையை மீண்டும் செயல்படுத்தவும். முடிவுகளான அளவுகளை ஒப்பிடுவதன் மூலம், அதிக அளவுத் தண்ணீர் கொண்டக் கொள்கலனைக் கண்டுபிடிக்கலாம்.