PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபகல் இரவாகவும், இரவு பகலாகவும் மாறுவதைப் போல, அன்றாட வாழ்க்கையில், நம்மைச் சுற்றியுள்ள பல விஷயங்களில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
நேரத்தை அளக்கும் சாதனங்கள்:
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், வெவ்வேறு வடிவமைப்புகளைக் கொண்ட பல வகை நேர அளவீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துவர்.
பண்டைய நாட்கள்:
பழைய காலங்களில் மணல் கடிகாரம், சூரியக் கடிகாரம் மற்றும் நீர் கடிகாரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி நேரத்தைக் கணக்கிட்டனர்.
மணல் கடிகாரம்
மக்கள் நிழல்களின் உதவியுடன் பழைய நாட்களில் நேரத்தைக் கணக்கிட்டனர். ஒரு குச்சியால் போடப்பட்ட நிழல் அதற்கு பயன்படுத்தப்பட்டது.
சூரியக் கடிகாரம்
பாத்திரம் அல்லது பாட்டிலில் ஒரு சிறிய துளையிட்டு,அதனை நேரத்தைக் கணக்கிடும் சாதனமாகப் பயன்படுத்தலாம். பாத்திரத்தில் அல்லது பாட்டிலில் இருந்து வெளியேறும் நீர் நேரத்தைக் கணக்கிடப் பயன்படுகிறது.
நீர் கடிகாரம்
நேரத்தை அளவிட நாடித் துடிப்பைக் கூடப் பயன்படுத்தலாம், ஆனால் துல்லியமாக அல்ல. நாடித் துடிப்பின் எண்ணிக்கை எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று கணக்கிட உதவும், 'ஒரு வினாடி', 'இரண்டு வினாடிகள்' என்று சாதாரண விகிதத்தில் உச்சரித்து நேரத்தைக் கணக்கிடலாம். எனினும், நேரத்தை அளவிடுவதற்கான இந்த நுட்பங்கள் மற்றும் முறைகள் துல்லியமான மதிப்பை வழங்காது.
நவீன கால கருவிகள்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும், கடிக்காரங்களின் அறிமுகத்துக்கு முன்பு பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் துல்லியமான நேர இடைவெளிகளை அளவிடக்கூடிய கடிகாரங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
சிறிய நேரங்களை அளக்க மின்னணு கடிகாரம் மற்றும் ஸ்டாப்வாட்ச் போன்ற மற்ற சாதனங்கள் பயன்படுத்தப்படும்.
மின்னணு கடிகாரம்
ஸ்டாப்வாட்ச்
நேரத்தின் அலகுகள்:
நேரத்தின் அலகுகள் நொடி, நிமிடம் மற்றும் மணிநேரம் ஆகியவை ஆகும். நேரத்தின் பெரிய அலகுகள் நாள், வாரம், மாதம் மற்றும் ஆண்டுகள் ஆகும்.
\(1\) மணிநேரம் \(= 60\) நிமிடங்கள்
\(1\) நிமிடம் \(= 60\) வினாடிகள்
கடிகாரங்களில் கிடைக்கும் மிகச்சிறிய அளவு ஒரு வினாடி என்பது ஆகும்.
Reference:
https://cdn.pixabay.com/photo/2015/06/25/17/21/smart-watch-821557_1280.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/3/37/Ancient_water_clock_used_in_qanat_of_gonabad_2500_years_ago.JPG