PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பருப்பொருளைச் சூடேற்றும் பொழுது என்ன நிகழ்கின்றது?

வெப்பப்படுத்துதலின்போது திணமத் தூகள்களில் ஏற்படும் மாற்றத்தை, பின்வரும் மாதிரிகள் விளக்குகின்றன. இந்த மாதிரிகளைப் பயன்படுத்தி திண்மம், திரவம் மற்றும்  வாயுக்களின் மாதிரிகளைக் கட்டமைக்கலாம்.

 Asset 11.png
திண்மத்தை வெப்பப்படுத்தும் போது, அவற்றின் துகள்கள் ஆற்றலை பெற்று தீவிரமாக அதிர்வுறுகின்றன. இதனால் துகள்கள் ஒன்றையொன்று சற்றுப் பிரிந்து விலகிச் செல்கின்றன. இதன்காரணமாக அந்தப் பொருளின் பருமன் அதிகரிக்கின்றது. இந்த நிகழ்வு விரிவடைதல் என அழைக்கப்படுகின்றது
இது எவ்வாறு நிகழ்கின்றது?

வெப்பப்படுத்தும்போது பருப்பொருளானது விரிவடைகின்றது. இதனால் தூகள்களுகிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கின்றது. ஆனால் துகள்களின் பரிமாணத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே அளவில் இருக்கின்றன.
 
வெப்பப்படுத்துதலின்போது பருப்பொருளின் நிறையில் மாற்றம் ஏற்படுவதில்லை. இதைப் பின்வரும் செயல்பாட்டின் மூலம் விளக்கலாம்.
 
உதாரணமாக ஒரேவிதமான இரண்டு இரும்புப் பூட்டை எடுத்துக்கொண்டு வெப்பப்படுத்துவதாகக் கருதுவோம். இவ்வாறு வெப்பப்படுத்தும்போது இரும்புப் பூட்டில் உள்ள துகள்களின் இடைவெளியில் மாற்றம் ஏற்பட்டு அது விரிவடைகின்றது. இருந்தபோதிலும் பொருளின் நிறையில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.
 
Asset 12.png
 
பொருளின் பருமனில் மாற்றம் ஏற்பட்டாலும் கூட அதனுடைய அளவு மற்றும் துகள்களின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் நிகழ்வதில்லை. எனவே வெப்பப்படுத்துதலின்போது நிறையானது எந்தவித மாற்றமடையாமல் உள்ளது.
 
ice-cubes-gcc99b2ff7_1920.jpg
 
பனிக்கட்டி உருகுதல் ஒரு பருப்பொருளின் நிலைமாற்றத்திற்கு ஒரு உதாரணமாகும். உருகுதல், கொதித்தல், உறைதல் மற்றும் ஆவி சுருங்குதல் போன்ற நிகழ்வுகளில் பருப்பொருளில் நிலைமாற்றம் ஏற்படுகிறது.
 
பருப்பொருள்களின் துகள்கள் போதுமான வெப்ப ஆற்றலைப் பெற்றபின் இவற்றின் துகள்களுக்கிடையிலான வலுவான ஈர்ப்பு விசையானது குறைகின்றது. துகள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகி ஒழிங்கற்ற முறையில் இயங்குகின்றன.
 
pexels-andrea-schettino-3923277.jpg
 
உதாரணமாகத் திண்மப் பனிக்கட்டியை \(O°C\) யில் இவை உருகித் தண்ணீராக மாறுகின்றது. இதைப்போல் தண்ணீரை \(100°C\) வெப்பப்படுத்தும்போது அவை கொதித்து ஆவியாக மாறுகின்றது.