PDF chapter test TRY NOW

ஒரு மலர் எவ்வாறு கனியாக மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள பூசணி மலரில் ஒரு சோதனையைச் செய்து பார்ப்போம்.
 
தேவையான பொருள்கள்:
  • குண்டூசி
  • நெகிழிப் பைகள்
செய்முறை:
  • பூசணித் தாவரம் மொட்டுகளை உருவாக்கும்போதே அதில் பத்துப் பெண் மலர் மொட்டுகளைக் கண்டுபிடித்து அவற்றை நெகிழிப் பையால் கட்டு.
  • இதனால் இம்மலருக்குள் வேறு எந்தப் பொருளும் நுழைய முடியாது.
  • காற்று நுழைவதற்காக, குண்டூசி கொண்டு நெகிழிப்பையில் சிறுசிறு துளைகளை உருவாக்க வேண்டும்.
  • இரண்டு அல்லது மூன்று நாள்கள் வரை காத்திரு.
  • பிறகு மொட்டுகள் விரிந்து மலராக மாறும்.
  • பிறகு மூன்று அல்லது நான்கு ஆண் மலர்களைத் தேர்ந்தெடுத்து அதன் மகரந்தத்தாளை எடுத்து, அதை நன்கு குலுக்கி, அதில் உள்ள மகரந்தத்தூள்களைச் சேகரித்து வைத்துக் கொள்.
  • பிறகு நெகிழிப் பைகளால் கட்டப்பட்ட பத்துப் பெண் மலர்களில், ஐந்து பெண் மலர்களின் பையைத் திறந்து, சிறிய தூரிகை மூலம் சேகரிக்கப்பட்ட மகரந்தத்தூள்களைக் கவனத்துடன் பெண்மலரின் சூலகமுடி சேதமடையாமல், அதில் தூவி அம்மலர்களை மீண்டும் நெகிழிப் பையால் கட்டிவைக்கவும்.
  • சில நாட்கள் கழித்து அவிழ்க்கப்படாத நெகிழிப் பைகளால் மூடப்பட்ட பெண்மலர்கள் உலர்ந்திருக்கும். கனி உருவாகியிருக்காது.
  • மகரந்தத்தூள்கள் தூவப்பட்ட மலர்கள் கனியாக உருவாகியிருக்கும்.
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.