PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதர்ப்பூசணி மற்றும் உருளைக் கிழங்கிலிருந்து புதிய தலைமுறைத் தாவரங்களை உருவாக்குதல்.
தேவையானவை:
- மண்ணால் நிரப்பப்பட்ட இரண்டு தொட்டிகள்
- உருளைக் கிழங்கு
- தர்ப்பூசணி விதைகள்
- தண்ணீர்
செய்முறை:
- இரண்டு தொட்டிகளை எடுத்துக்கொண்டு அவற்றை இயற்கை உரம் கலந்த மண்ணால் நிரப்பவும். காய்ந்து போகாத தோல் உடைய புதிய உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்துக்கொண்டு, ஒரு தொட்டியில் அதைப் புதைத்துவைக்கவும்.
- மறு தொட்டியில் தர்ப்பூசணி விதைகளை விதைக்கவும். இரண்டு தொட்டிகளுக்கும் தினமும் தண்ணீர் ஊற்றி, அவற்றைப் பராமரிக்கவும்.
காண்பன:
- சில நாட்கள் கழித்து, ஒரு தொட்டியில் உருளைக்கிழங்கு முளைத்திருப்பதை நாம் காணலாம்.
- மறு தொட்டியில் விதைக்கப்பட்ட தர்ப்பூசணி விதைகள் முளைத்துச் செடிகளைத் தந்திருக்கும்.
- ஒவ்வொரு விதையும் ஒரு செடியை உருவாக்குகிறது.
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.