PDF chapter test TRY NOW
இருபரிமாண (2D) மற்றும் முப்பரிமாண படங்கள்(3D):
மேலே கொடுக்கப்பட்டுள்ள இரு படங்களையும் பார்த்தவுடன் இரண்டிற்குமிடையேயான வேறுபாடு நமக்குப் புரிந்திருக்கும்.
முதலில் இருப்பது இருபரிமாணப் படம் அதாவது 2D ஆகும். அடுத்து இருப்பது 3D அதாவது முப்பரிமாணப் படம் ஆகும்.
நீளம் மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணங்களை மட்டும் கொண்டிருக்கும் படங்கள் இருபரிமாணப் (2D) படங்கள் எனப்படும். ஆனால், முப்பரிமாணப் படங்கள் நீளம், அகலம் மற்றும் உயரத்தையும் கொண்டிருக்கும்.
இருபரிமாணப் படங்களை விட முப்பரிமாணப் படங்கள் நம் கண்முன்னே நம் நிகழ் உலகில் தோன்றுவது போல இருக்கும்.
முப்பரிமாணக் காணொளிகள், காட்சிகளை நம் கண்முன் நிகழ்வது போலக் காட்டுகின்றன. முப்பரிமாணத்தில் திரைப்படங்கள் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது முப்பரிமாண விளையாட்டுகளும் வந்துவிட்டன.
மெய்நிகர் (VIRTUAL REALITY) என்னும் தொழில் நுட்பம் முப்பரிமாணத்தின் அடுத்த கட்டமாக வந்துள்ளது.
மெய்நிகர் என்பது கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல காட்டுவதாகும்.
இதன் மூலம் நாம் விளையாடும்போது, உண்மையாக நாம் மைதானத்தில் விளையாடுவது போன்ற உணர்வு நமக்கு தோன்றும். தற்போது திறன்பேசிகளிலும் (SMART PHONES) மெய்நிகர் செயலிகள் வந்து விட்டன.