PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதிசைவேகத்தில் ஏற்படும் மாற்றத்தை இறுதி திசைவேகம் (v) மற்றும் ஆரம்பத் திசைவேகம் (u) என்று எழுதலாம். \(v\)என்பது ஒரு பொருளின் இறுதித் திசைவேகம் மற்றும் \(u\) என்பது ஒரு பொருளின் ஆரம்பத் திசைவேகம் ஆகும்.
முடுக்கத்தின் SI அலகு m/s^2 ஆகும்.
முடுக்கம் வகைகள்:
நேர் முடுக்கம்
எதிர் முடுக்கம்
நேர் முடுக்கம்:
ஒரு பொருளின் திசைவேகம் காலத்தைப் பொறுத்து அதிகரித்தால், அந்த பொருள் நேர் முடுக்கம் என்று கூறப்படுகிறது.
அதிக வேகத்தில் நகரும் இரு சக்கர வண்டி நேர் முடுக்கம் கொண்டது.
பச்சை சமிக்ஞைத் தொடர்ந்து ஒரு வாகனம் வேகமாக நகர்கிறது.
எதிர் முடுக்கம்:
ஒரு பொருளின் திசைவேகம் காலத்தைப் பொறுத்து குறைந்தால், அந்த பொருள் எதிர் முடுக்கம் என்று கூறப்படுகிறது
ஓடும் கார் பிரேக் போட்ட பிறகு மெதுவாக நிற்கிறது.
மெதுவாக நிற்கும் உருளும் பந்து.
என் பெயர் சிறுத்தை.
நான் மிகவேகமாக ஓடக்கூடிய விலங்கு. எனது வேகம் என்ன தெரியுமா? அது,\(25\) / வி முதல் \(30\)/ வி வரை ஆகும். என்னால் இரண்டு விநாடியில் எனது வேகத்தினை \(0\)லிருந்து \(20\) / வி ஆக மாற்றிக் கொள்ளமுடியும். எனது முடுக்கம் வியப்பாக உள்ளது அல்லவா! அதை நீங்கள் கணக்கிட முடியுமா?