PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வேகம் 
இந்த பயிற்சியில் வேகம் மற்றும் அதன் பல்வேறு வகைகள் பற்றி அறிந்து கொள்வோம். வேகம் என்பது அளவிடல் அளவு ஆகும், இது ஒரு பொருள் பயணிக்கும் வேகத்தின் அளவை (எண் மதிப்பு) மட்டுமே கூறுகிறது.
 
Important!
வேகம் என்பது தொலைவு மாறுபடும் விகிதமாகும்.
வேகம் = தொலைவு(d) காலம்(t) 

வேகத்தின் \(SI\) அலகு மீட்டர்(m)விநாடி(s) =ms = ms1 ஆகும். 

 

மேலும், வேகம் மற்றும் காலத்தைப் பயன்படுத்தி தொலைவைக் கணக்கிட விரும்பினால், பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.

 

தொலைவு = வேகம் × காலம்.

 

தொலைவு மற்றும் காலத்தைப் பொறுத்து வேகத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை முறையே:

  • சீரான வேகம் - இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் சமமான இடைவெளியில் சமமான தொலைவைக்  கடந்து சென்றால், அந்த பொருள் சீரான வேகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
  • சீரற்ற வேகம் - ஒரு பொருள் வெவ்வேறு  கால இடைவெளியில் வெவ்வேறு தொலைவைக் கடந்து சென்றால், அந்த பொருள் சீரற்ற வேகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
  • சராசரி வேகம் - ஒரு பொருளின் சராசரி வேகத்தை அந்த பொருள் கடந்த மொத்தத் தொலைவையும், அந்த தொலைவைப்  பயணிக்க எடுக்கும் மொத்த காலத்தையும் வகுத்து கணக்கிடலாம்.

சராசரி வேகம் =கடந்த மொத்தத் தொலைவு  எடுத்துக்கொண்ட மொத்த காலம் 

 

\(1\) கி.மீ / மணி \(=\) \(5 / 18\) மீ / வி இதனை எவ்வாறு நாம் பெறுகிறோம் என்பதனைக் காண்போம். \(1\)கி.மீ \(=\) \(1000\) மீ  ஒரு மணி \(=\) \(3600\) வி  \(1\) கி.மீ / மணி \(=\) \(1000\) மீ / \(3600\) வி \(=\) \(5\) / \(18\) மீ / வி ஆகும்.  

 
Important!

பொதுவான வேகங்கள்:

  • ஆமை \(0.1\) மீ/வி
  • மனிதர்களின் நடையின் வேகம் \(1.4\) மீ/வி
  • விழும் மழைத்துளியின் வேகம் \(9-10\) மீ/வி
  • ஓடும் பூனையின் வேகம் \(14 \) மீ/வி
  • சைக்கிளின் வேகம் \(20 - 25\) கி.மீ/மணி
  • சிறுத்தை ஓடும் வேகம் \(31\) மீ/வி
  • வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தினை எறியும் வேகம் \(90-100\) மைல்/மணி
  • பயணிகள் விமானத்தின் வேகம் \(180\) மீ/வி
  • ராக்கெட்டின் வேகம் \(5200\) மீ/வி