PDF chapter test TRY NOW
இப்பகுதியில் டிஜிட்டல் வெப்பநிலைமானியைப் பற்றியும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
மருத்துவ வெப்பநிலைமானி மற்றும் ஆய்வக வெப்பநிலைமானி இருக்க ஏன் இந்த டிஜிட்டல் வெப்பநிலைமானியை நாம் பயன்படுத்த வேண்டும்?
நாம் பாதரச வெப்பநிலைமானியினை பயன்படுத்துவதில் நடைமுறையில் சில சிக்கல்கள் இருக்கிறது. ஏனெனில் பாதரசம் ஒரு நச்சுத் தன்மை கொண்டது ஆகும். மேலும் பாதரச வெப்பநிலைமானியானது உடைந்து விட்டால் பாதரசத்தினை அப்புறப்படுத்துவதும் என்பது மிகவும் கடினமான செயல் ஆகும்.
எனவே தான் இன்றைய காலகட்டங்களில் பாதரசத்தினை பயன்படுத்தாத டிஜிட்டல் வெப்பநிலைமானியானது பயன்படுத்துகிறோம்.
டிஜிட்டல் வெப்பநிலைமானி எவ்வாறு செயல்படுகிறது?
இது நமது உடலில் இருந்து வெளியேறும் வெப்பத்தினை நேரடியாக அளக்கக்கூடிய ஓர் உணர்வியினை கொண்டு உள்ளது. இதன் மூலம் நாம் உடலின் வெப்பநிலையினை அளக்க முடியும்.
ஒரு முறை ஒரு மாணவன் சூடான பாலின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியை பயன்படுத்தி அளந்தறிய முயற்சி செய்தான். ஆனால், அவனது ஆசிரியர் அவ்வாறு செய்வது கூடாது என தடுத்து விட்டார்.
ஏன்?
மருத்துவ வெப்பநிலைமானியினை நாம் மனிதர்களின் வெப்பநிலையினை தவிர பிற பொருள்களின் வெப்பநிலையினை அளக்க பயன்படுத்தக்கூடாது.
டிஜிட்டல் வெப்பநிலைமானி
அந்த மாணவன் ஆசிரியரிடம் மருத்துவ மானியை எங்க வைக்கலாம் ? எங்கு வைக்க கூடாது என்று கூறுங்கள் என்று கேட்டான்.
மருத்துவ வெப்பநிலைமானியை வெளிச்சத்தில் படும்படி அல்லது எரியும் பொருள்களுக்கு அருகிலோ வைக்க கூடாது.
ஏன்?
பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாக வெப்பநிலைமானியானது உடைந்து விடும்.
டிஜிட்டல் வெப்பநிலைமானியினை பயன்படுத்துதல்:
டிஜிட்டல் வெப்பநிலைமானி
- வெப்பநிலைமானியின் முனையினை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் சூடான நீரினை பயன்படுத்த கூடாது.
- மேலே உள்ள படத்தில் உள்ளபடி , \(“ON”\) பொத்தானை அழுத்த வேண்டும்.
- வெப்பநிலைமானியின் முனையினை வாய்ப்பகுதி, நாக்கின் அடியில், அல்லது தோள்பட்டையின் அடியில் என ஏதாவதொரு இடத்தில் வைக்க வேண்டும்
- அதே நிலையில் வெப்பநிலைமானியினை பீப் என்ற ஓசை வரும் வரை வைத்திருக்க வேண்டும். அதாவது, ஏறத்தாழ \(30\) விநாடிகள் ஆகும்.
- படத்தில் உள்ளப்படி, திரையில் தெரியும் வெப்பநிலையினை குறித்துக் கொள்ள வேண்டும்.
- வெப்பநிலைமானியினை அணைத்து விட்டு, நீரினைக் கொண்டு கழுவி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
Important!
பெரும சிறும வெப்பநிலைமானி:
ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப் பயன்படும் வெப்பநிலைமானியானது பெரும சிறும வெப்பநிலை மானி என அழைக்கப்படுகிறது.