PDF chapter test TRY NOW

இப்பகுதியில் பாரன்ஹீட், செல்சியஸ்  மற்றும் கெல்வின் அளவீட்டிற்கும் உள்ள தொடர்பை பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
Screenshot 2022-11-03 185344.png
பாரன்ஹீட் - செல்சியஸ் - கெல்வின்
 
பாரன்ஹீட் அளவீட்டிற்கும் செல்சியஸ் அளவீட்டிற்கும் உள்ள தொடர்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
 \frac{\text{(F-32)}}{\text{9}} = \frac{\text{C}}{\text{5}}
 
 கெல்வின் அளவீட்டிற்கும் செல்சியஸ் அளவீட்டிற்கும் உள்ள தொடர்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
K = 273.15 + C
 
சில பொருள்களின் வெப்பநிலைகள்  செல்சியஸ்  அளவீட்டு முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் முறையே
 
வெப்பநிலைசெல்சியஸ்  அளவீட்டு முறை (°C)
நீரின் கொதிநிலை 100
நீரின் உறைநிலை 0
மனித உடலின் சராசரி வெப்பநிலை 37
அறை வெப்பநிலை (சராசரி)72
 
சில பொருள்களின் வெப்பநிலைகள்  பாரன்ஹீட்  அளவீட்டு முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் முறையே
 
வெப்பநிலைபாரன்ஹீட் அளவீட்டு முறை (° F)
நீரின் கொதிநிலை 373.15
நீரின் உறைநிலை 273.15
மனித உடலின் சராசரி வெப்பநிலை 310.15
அறை வெப்பநிலை (சராசரி)296.15
 
சில பொருள்களின் வெப்பநிலைகள் கெல்வின் அளவீட்டு முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் முறையே
 
வெப்பநிலைகெல்வின் அளவீட்டு முறை (K)
நீரின் கொதிநிலை 212
நீரின் உறைநிலை 32
மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.6
அறை வெப்பநிலை (சராசரி)23
  • உலகின் பெரும்பான்மையான மனிதர்கள் அன்றாட வாழ்வில் வெப்பநிலைகளை அளக்க செல்சியஸ் அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றார்கள்.
  • கெல்வின் அளவீட்டு முறையானது தனிச்சுழி அளவீட்டு முறை மட்டும் கிடையாது.
  • 1 °C வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டால் 1 K வெப்பநிலை மாறுபாடு ஏற்படும் வகையில் கெல்வின் அளவீட்டு முறை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
  • இதன் மூலம் 273.15 என்ற மதிப்பினை செல்சியஸ் அளவீட்டுடன் கூட்டுவதன் மூலமாகவோ அல்லது கழிப்பதன் மூலமாகவோ நாம் மிக எளிமையாக செல்சியஸ் அளவீட்டு முறையினை தனிச்சுழி அளவீட்டு (கெல்வின்) முறைக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர். பாரன்ஹீட் அளவீட்டு முறையினை தனிச்சுழி ( கெல்வின் ) அளவீட்டு முறைக்கு மாற்றுவது எளிமையானதாக இல்லை. இதனை சரி செய்ய அவர்கள் ரான்கீன் அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர்.
  • கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் மற்றும் இயற்பியலாளரான ரான்கீன் 1859 ஆம் ஆண்டு இம்முறையினை அறிமுகப்படுத்தினார். இது தனிச்சூழி அளவீட்டு முறையாகும்.
  • 1°R ல் ஏற்படும் மாற்றம் 1°F க்கு சமமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
  • எனவே பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச்சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் அவர்கள் R = F + 459.67 என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் முறைக்கு மதிப்பினை எளிமையாக மாற்றிக்கொள்ள இயலும்.