PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மைட்டோகாண்ட்ரியா:
  
YCIND20220803_4053_Cell Biology_09.png
மைட்டோகாண்ட்ரியா
  • இது செல்லின் ஆற்றல் மையம் எனப்படும்.
  • நாம் உண்ணும் உணவைச் செரிமானம் செய்து ஆற்றலைப் பெற இது மிகவும் உதவுகின்றது.
  • சுறுசுறுப்பாக இயங்கும் செல்களில்  மைட்டோகாண்ட்ரியா அதிக  அளவில் காணப்படும். ஆனால் குறைந்த செயல்கள் செய்யும் செல்களில் இவை குறைவாகவே காணப்படும்.
  • தசை செல்களில், எலும்பு செல்களை விட மைட்டோகாண்ட்ரியா அதிகம் இருக்கும்.
  • இது இரட்டை சவ்வினால் ஆன கோள அல்லது குச்சி வடிவிலான நுண்ணுறுப்பு ஆகும்.
  • காற்று சுவாச வினைகளில் இது ஈடுபடும். பின் ஆற்றல் வெளியீடு நடக்கும். இந்த ஆற்றல் அனைத்து விதமான வளர்சிதை மாற்றங்களுக்கும் பயன்படுகின்றது. எனவே இது "செல் ஆற்றல் மையம்" எனப்படும்.
பசுங்கணிகம்:
  
 
YCIND20220804_4064_Cell Biology_02.png
பசுங்கணிகம்
  • இவை தாவரங்களின் உணவு தயாரிப்பாளர்கள் ஆகும்.
  • இது ஒரு வகை கணிகம் ஆகும்.
  • இது தாவரச் செல்களில் மட்டுமே காணப்படும் ஒரு பச்சை நிற நுண்ணுறுப்பு ஆகும்.
  • விலங்குச் செல்களில் இவை இருக்காது. எனவே, அவை ஒளிச்சேர்க்கை நிகழ்வில் ஈடுபடுவது இல்லை.
  • இதில் வண்ணக்கணிகம் (நிறமுள்ளவை) மற்றும் வெளிர்கணிகம் (நிறமற்றவை) என இரு வகைகள் உள்ளன.
பசுங்கணிகத்தின் பணிகள்:
  • இவற்றில் பச்சையம் என்னும் நிறமி உள்ளது. எனவே, இவை சூரிய ஒளியிலிருந்து உணவைத் தயாரிக்க கூடிய திறனைப் பெற்றுள்ளன.
  • பச்சையம், சூரிய ஒளியை வேதி ஆற்றலாக மாற்றி உணவைத்  தயாரிக்கின்றது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட உணவைத் தாவரம் மற்றும் விலங்குகள் பயன்படுத்துகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
Important!
தாவரத்தில் பல வண்ணங்கள் இருக்கக் காரணம் கணிகங்கள் ஆகும். பச்சை நிறத்தின் காரணம் பசுங்கணிகம். மலர்கள் மற்றும் பழங்களின் நிறத்திற்குக் காரணம் வண்ண கணிகங்கள். பழங்கள் பழுக்கும் போது பசுங்கணிகங்கள் வண்ணக்கணிகங்களாக மாறும். ஸ்டார்ச், சர்க்கரையாக மாறுவதே காய் கனியாக மாறுவதற்கான காரணம் ஆகும்.