
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநாம் அனைவரும் நம் வாழ்வில் ஒரு முறையாவது மருத்துவமனைக்கு சென்று, ஒரு முறையாவது மருந்து உண்டு இருப்போம். நோய் மற்றும் மருந்து தொடர்பாக பள்ளியில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த உரையாடலை இப்பகுதியில் காண்போம்.

மருந்துகள்
ஆசிரியர்: நீங்கள் எப்பொழுதாவது, சிந்தித்தது உண்டா ? மருந்து, முதன் முதலில் எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது?
மாணவன்: இல்லை, ஐயா.
ஆசிரியர்: எந்த ஒரு நோயாக இருந்தாலும் சரி, அந்த நோய்க்கு முழுமையானத் தீர்வு அளிக்கும் பொருளுக்கு மருந்து என்று பெயர். அது சரி, நீ ஏன் இரண்டு நாட்களாகப் பள்ளிக்கு வரவில்லை என்ன நிகழ்ந்தது?
மாணவன்: எனக்கு காலரா ஏற்பட்டு விட்டது. அதனால், மருத்துவமனைக்கு சென்று மருந்து எடுத்து வந்தேன் ஐயா. இப்பொழுது, நான் முழுமையாக குணமடைந்து விட்டேன் ஐயா.
ஆசிரியர்: காலராவிற்கு மருத்துவர், உனக்கு என்ன மருந்து கொடுத்தார்?
மாணவன்: ஒரு நீர் கரைசலைக் குடிக்கக் கொடுத்தார், பிறகு இரண்டு நாட்களில் நான் குணமடைந்து விட்டேன். ஐயா.
ஆசிரியர்: அந்த நீர்க்கரைசலின் பெயர் உனக்கு தெரியுமா?
மாணவன்: இல்லை ஐயா. நீங்கள் எனக்கு அந்த நீர்கரைசலின் பெயரைக் கூற முடியுமா?
ஆசிரியர்: அந்த நீர்க்கரைசலின் பெயர் தான் வாய்வழி நீரேற்றுக் கரைசல் (Oral Rehydration Solution) (O.R.S) எனப்படும்.
மாணவன்: ஐயா! (O.R.S) கரைசலா? புதுமையான இருக்கிறதே!
ஆசிரியர்: எப்பொழுது, இந்த நீர்க்கரைசல் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் தெரியுமா?
மாணவன்: இல்லை ஐயா ? நீங்கள் இதை விளக்கமாகக் கூற முடியுமா?
ஆசிரியர்: சரி, முதன் முதலில் 1971 ஆம் ஆண்டு வங்காளத்தில் நடந்த விடுதலைப் போரின் போது, அகதியாக வெளியேறிய மக்கள் காலரா நோயினால் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டு இருந்தனர். அப்பொழுது, அவர்களுக்கு"இந்தியா மருத்துவர் திலீப் மஹாலபாபைஸ்"என்பவர். இந்த வாய்வழி நீரேற்றுக் கரைசல் Oral Rehydration Solution (O.R.S) உட்கொள்ளச் செய்தார். அப்பொழுது, காலரா நோயினால் ஏற்பட்ட இறப்பு விகிதமானது, 50% லிருந்து 3% சதவீதமாக குறைந்து விட்டது. இவர் 1971-72 ஆம் ஆண்டு மக்களுக்குக் காலரா பரவியிருந்த காலங்களில் O.R.S இன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்துக் கூறினார்.
மாணவர்: இதே போன்று திலீப் மஹாலபாபைஸ் வேறு எங்காவது? இந்த மருந்தை சோதித்து இருக்கிறார? ஐயா.
ஆசிரியர்: ஆம். ஒருமுறை மணிப்பூரில் ஏற்பட்ட காலரா தொற்றின் போது, உடல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செயற்கை திரவ உப்பு பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது, இவர் செய்த களச்சோதனையில் O.R.S சிகிச்சை முக்கிய பங்கு வகித்தது.
மாணவர்: O.R.S ன் செயல்பாடு பற்றித் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறது. ஐயா!
ஆசிரியர்: கீழே உள்ள அட்டவணையானது, UNICEF மற்றும் WHO விதிமுறைகளின் படி O. R. S எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்ற விதிமுறையை வழங்கியுள்ளது.

ORS தயாரிப்பு முறை
மாணவர்: நன்றி! ஐயா
ஆசிரியர்: உங்களுக்கு தெரியுமா? ஒரு நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் குடலில், சாதாரணமாக 20 \text{லிட்டர்} தண்ணீரானது குடல் சுவர் வழியாகச் சென்று தொடர்ந்து பரிமாற்றம் நடைபெறுகிறது.
மாணவர்: தொடர்ந்து நீர் இப்படி பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்குமா? ஐயா.
ஆசிரியர்: ஆம். ஒவ்வொரு 24 \text{மணி} நேரத்திலும் நீரானது மீண்டும் உறிஞ்சப்படுகிறது.
இந்த வழிமுறையின் மூலம் தான் செறிக்கப்பட்ட உணவிலிருந்து, கரையக்கூடிய உயிரினக்கழிவுகள் (metabolites) இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.
மாணவர்: காலராவின் போது, நீர் இழப்பு அதிகமாக இருக்கும் அல்லவா, ஐயா?
ஆசிரியர்: ஆம். நீ கூறுவது சரியே! வயிற்றுப்போக்கு காரணமாக, ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, நீர் வெளியேற்றப்பட்டு, உடலானது திரவ சமநிலையை இழக்கின்றது. இது நீர்ப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.
மாணவன்: ஐயா, பெரும்பாலும், காலரா நோயின் தாக்கத்தால் மரணம் ஏற்படுகிறதா? இல்லை, உடலின் நீர்பற்றாகுறையால் மரணம் ஏற்படுகிறாதா?
ஆசிரியர்: மனிதன் இறப்பது வயிற்றுப்போக்கினால் கிடையாது. அதிக நீர்போக்கினால் தான் இறப்பு ஏற்படுகிறது.
உடலின் திரவத்தில் 10% க்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.