PDF chapter test TRY NOW
அறிமுகம்
விலங்குகள் இயற்கையின் மிகப் பெரிய படைப்புகளில் ஒன்றாகும். இந்த உலகில் \(7\) மில்லியனுக்கும் அதிகமான விலங்கு இனங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட \(1.5\) மில்லியனுக்கும் அதிகமான உயிருள்ள விலங்கு இனங்களைப் பற்றி மட்டுமே தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் \(1\) மில்லியன் பூச்சி இனங்களாகும்.
அன்றாட வாழ்வில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிக மேம்பாட்டிற்கும் விலங்குகள் ஒரு பாலமாக இருக்கிறது. விலங்குகள் மனிதர்களுக்கு உண்ண உணவு, உடை மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.
விலங்குகளின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு, பராமரிப்பு பற்றியும் நாம் இப்பாடத்தில் அறிந்து கொள்வோம்.
விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுப்பொருள்கள்
மனிதர்கள் உணவுக்காக விலங்குகளை சார்ந்து வாழ்கின்றன. அதில் கிடைக்கும் சில தேவையான ஊட்டச்சத்துகள் உடலுக்கு மிகவும் அவசியமாகும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
- பால்
- முட்டை
- தேன்
- இறைச்சி
பால்
பால் என்பது வெள்ளை நிறம் கொண்ட திரவமாகும். இது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற பெண் விலங்கின் பால் சுரப்பிகளில் சுரக்கும், ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். மேலும், குழந்தைகளுக்கு முக்கிய ஊட்டச்சத்து உணவாகப் பால் கருதப்படுகிறது. இதனைத்தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோம்.
i. சில விலங்குகளின் பால் மனிதன் உண்ணும் உணவிற்குப் பயன்படுகிறது. அவை
- பசு
- ஆடு
- எருமை
- குதிரை
- ஒட்டகம்
ii. நாம் பாலை பயன்படுத்தி சில அன்றாட உணவு வகைகளை தயாரிக்கப்படுகின்றன. அவை
- தேநீர்
- காஃபி
- ஐஸ்கிரீம்
- சாக்லேட்
- இனிப்பு
- பால் சம்பந்தமான பொருள்கள்
iii. பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டைச்சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன. மேலும் சில உணவுகள் தயாரிக்க உதவுகிறது. அவை
- பன்னீர்
- பாலாடைக்கட்டி
- பாலேடு (க்ரீம்)
- வெண்ணெய்
- நெய்
- தயிர்
பால் பொருட்கள்
Answer:
Reference:
https://www.flickr.com/photos/30478819@N08/45680168564