PDF chapter test TRY NOW
இறைச்சி
உலக அளவில் விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவில், சுமார் \(60\) முதல் \(70\) சதவிகித உணவு தானியங்களை நாம் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்குக் கொடுத்து அவற்றை வளர்க்கிறோம். இறைச்சி, முட்டை, பால் போன்ற உணவுகள் பெரும்பகுதி மக்களுடைய ஊட்டச்சத்து மிக்க உணவுமுறையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.
இறைச்சி என்பது விலங்குகளின் உடலில் உள்ள தசைப்பகுதியாகும். மனிதர்கள் சிலர் இந்த தசை பகுதியை தான் உணவாக உட்கொள்கின்றனர். பெரும்பாலும் இறைச்சி என்பது எலும்புடன் ஓட்டி இருக்கும் தசையையும், அதில் உள்ள கொழுப்பையும் குறிக்கிறது.
Example:
கோழி, ஆடு, முயல், பன்றி, வெள்ளாடு, ஒட்டகம், எருமை, மீன், நண்டு, இறால்.
இறைச்சி
- மனிதர்கள் சிலர் விலங்குகளின் இறைச்சியை கணிசமான விகிதத்தில் உணவாக உண்ணுகின்றன.
- இறைச்சியானது உயர்தர புரதத்தினை கொண்டுள்ளது. சராசரியாக புரதத்தின் அளவானது \(16\) லிருந்து \(25%\) வரை வேறுபடுகிறது.
- இறைச்சியிலுள்ள புரத அமினோ அமிலங்களின் அமைப்பு புரதச்சத்தின் மதிப்பை உயர்த்துகிறது.
- இறைச்சியில் இரும்பு, துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாது உப்புக்களை அதிக அளவு கொண்டுள்ளது. மேலும் இது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
- மனிதர்கள் பலர் கோழி இறைச்சியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் பெருமளவில் அதை முக்கிய உணவாக எடுத்துக் கொள்கின்றன. இதனால் வணிக ரீதியாக கோழிப்பண்ணை அமைத்து கோழிகள் வளர்க்கப்படுகிறது.
கோழிப் பண்ணை அமைத்தல்
பண்ணை அமைத்தல் என்பது வீட்டுத் தேவைகளுக்கென வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து, வான்கோழி போன்றவற்றை அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன.
கோழிப் பண்ணை அமைத்தல் என்பது கோழிகளின் எண்ணிக்கையை அதிக அளவில் உற்பத்தி செய்வது ஆகும்.
கோழிப் பண்ணையை இரு வகைகளாகப் பிரிக்கலாம்:
i. முட்டையிடுபவை
ii. பிராய்லர் (இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை)
- கோழிப்பண்ணை அமைக்கும் இடத்தில் பாதுகாப்பான நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும்.
- கோழிகளை அடைக்கக் கூடுகள், அடிப்படைத் தேவைகளான தண்ணீர், மின்சார வசதி போன்றவை இருக்க வேண்டும்.
- கோழிப்பண்ணை நல்ல மேடான இடத்தில் இருக்கவேண்டும்.
- கோழிப்பண்ணை தண்ணீர் தேங்கும் இடத்தில் இருக்கக்கூடாது.
- கோழிகளுக்கு புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் நிறைந்த உணவுப்பொருள்கள் தேவைப்படும்.
- கோழித் தீவனம் என்பது தானிய வகைகளான மக்காச்சோளம், கோதுமை, கம்பு மற்றும் அரிசித் தவிடு போன்றவற்றை நன்கு அரைத்து கொடுக்க வேண்டும் இவற்றோடு நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை மசித்து கொடுக்கலாம்.
கோழிப்பண்ணை
நோய்கள்:
கோழிப் பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சில நோய்க்கிருமிகளால் நோய்கள் உண்டாக்கும். இதைத் தடுக்க கோழிகள் இருக்கும் இடம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் மேலும் தடுப்பூசி போட வேண்டும்.
பொதுவாக கோழிப் பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு வரும் நோய்கள் பின் வருமாறு:
- சால்மோனெல் லோசிஸ் (வயிற்றுப்போக்கு) - இந்நோயைப் பாக்டீரியா உருவாக்கும்
- ரானிக் கெட் நோய் (அம்மை நோய்) - இந்நோயை வைரஸ் உருவாக்கும்
- ஆஸ்பர்ஜில்லஸ் நோய் (பலவீனம், நலிந்துபோதல்) - இந்நோயைப் பூஞ்சை உருவாக்கும்
Reference:
https://www.piqsels.com/en/public-domain-photo-fjeqg/download
https://www.freepik.com/free-photo/sliced-raw-pork-used-cooking-with-chili-tomato-basil-fresh-pepper-seeds_10038081.htm#page=1&query=meat&position=25