PDF chapter test TRY NOW

அனைத்து நெகிழிகளும் ஒரே மாதிரியான அலகுகளால் அமையப் பெற்றிருப்பதில்லை.
நெகிழிகளில் ஒற்றைப்படிகள் இணைத்திருக்கும் அமைப்பை பொறுத்து அவற்றின் பண்புகள் மாறுபடுகின்றன.
YCIND_221221_4847_chemistry_tamil_1.png
நெகிழியின் வகைகள்
 
ஒரு சில வகை நெகிழிகளில் ஒற்றைப்படிகள் நேரியல் அமைப்பில் இணைந்தும் வேறுசிலவகைகளில் குறுக்குப் பிணைப்பில் இணைந்தும் காணப்படுகின்றன.
 
நெகிழிகள் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
  • இளகும் நெகிழிகள்
  • இறுகும்நெகிழிகள்
இளகும் நெகிழிகள்:
இளகும் நெகிழி என்பது வெப்பப்படுத்தும் பொழுது எளிதில் மென்மையாகி, வளையும் தன்மை கொண்ட நெகிழியாகவும் மீண்டும் குளிர்விக்கும் பொழுது திட நெகிழியாகவும் மாற்றமடையும்.
இவ்வகை நெகிழிகளை உருக்கி மறுசுழற்சி செய்து வேறோரு நெகிழிப் பொருளாக்கலாம்.
 
 cover.jpg Bottle.jpg
பாலித்தீன் பை மற்றும் PET பாட்டில்கள்
 
பாலி எத்தலீன் (பாலித்தீன்) மற்றும் PET (பாலி எத்திலீன் டெர்ப்தாலேட்) ஆகியவை இளகும் நெகிழிக்கு எடுத்துக்காட்டாகும்.
 
இறுகும் நெகிழிகள்:
இறுகும் நெகிழிகள் என்பது வெப்பப்படுத்தும் பொழுது மென்மையாவதில்லை, பின்பு வளைவதில்லை. எனவே இவ்வகை நெகிழிகளை மீண்டும் உருக்கி வேறொரு பொருளாக மாற்ற முடியாது.
shutterstock458562823w300.pngpexels-cottonbro-studio-5894550.jpg
மின்சுவிட்சுகள்
 
பேக்லைட்  இறுகும் நெகிழிக்கு எடுத்துக்காட்டாகும். இது வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தாது. எனவே இதனை பயன்படுத்தி மின்சுவிட்சுகள் மற்றும் பாத்திரங்களின் கைப்பிடிகள் தயாரிக்க பயன்படுகிறது.
 
shutterstock_1440430475.jpg
தீயினை தாங்கும் திறன் கொண்ட ஆடை
 
மெலமைன் இறுகும் நெகிழிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகும். இது தீயினைத் தாங்கும் திறன் பெற்றிப்பதால் தரை ஓடுகள் மற்றும் தீ அணைக்கும் துணிகள் போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகின்றன.
 
இந்த இரண்டு வகையான நெகிழிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறிவோம்.
 
இளகும் நெகிழிகள்
இறுகும் நெகிழிகள்
சங்கிலிகளுக்கு இடையே குறுக்கு பிணைப்பு இல்லை.
பலபடி சங்கிலிகளின் இணைப்பு குறுக்கு இணைப்பாக உள்ளது.
சங்கிலிகளுக்கு இடையே பலவீன ஈர்ப்பு சக்தி உள்ளது. வலிமையான சகப்பிணைப்பாக அமைந்துள்ளதால் வெப்பப்படுத்தும் பொழுது உடைவதில்லை.
வெப்பப்படுத்தும்போது இளகுகிறது. வெப்பப்படுத்தும் பொழுது கடினத்தன்மை பெறுகின்றன.