PDF chapter test TRY NOW

நெகிழிகள் விலை குறைவாகவும் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் உள்ளதால் அதிகளவு பயன்படுத்த தொடங்கி விட்டோம். இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடும் உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து உள்ளது. அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.
  
நில மாசுபாடு:
 
pexels-tom-fisk-3186574.jpg
நெகிழிகள் நிலத்தில் குப்பையாக சேர்த்தல்
  
நெகிழிகளை பயன்படுத்தி விட்டு குப்பைகளாக எரிந்து விடுகிறோம். இவை மண்ணில் சிதைவடைவது இல்லை. அதனால் நீண்ட நாட்களாக நெகிழிகள் சேர்ந்து, குவிந்து அதிக அளவு குப்பைகளாக மாறுகின்றது.
 
ஒருமுறை மட்டும் பயன்படுத்தி எரியும் பாலிதீன் பைகள்தான் குப்பைகளுக்கு முக்கிய காரணமாகின்றன.  இவை சுற்றுப்புறத்தை மாசுப்படுத்துகின்றன.
 
இந்த நெகிழிகள் வடிகால்களை அடைத்துக் கொள்வதால் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உருவாகி அதன் மூலம் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்களுக்கு காரணமாகின்றன.
 
கடல் மாசுபாடு:
 
shutterstock_1296670684.jpg
நெகிழிகள் கடலில் கலந்திருத்தல்
  
நெகிழிப்பைகள், பாட்டில்கள் மற்றும் உறிஞ்சுக்குழாய்கள் போன்ற நெகிழிக்கழிவுகள் கடல்களை சேர்கின்றன. இவை சூரிய ஓளி மற்றும் அலையசைவுகளுக்கு உட்பட்டு சிறிய துண்டுகளான மைக்ரோ நெகிழிகளாக உடைகின்றன.
 
shutterstock707786926w300.jpg
ஷாம்பூவில் மைக்ரோ நெகிழிகள்
வீட்டு உபயோகப் பொருள்களான பற்பசை, முகம் கழுவும் கரைசல்,ஷாம்பூ மற்றும் உடலை துய்மைபடுத்தும் தேய்ப்பான்கள் ஆகியவற்றில் மைக்ரோ நெகிழிகள் காணப்படுகின்றன.
இவையும் பயன்படுத்தும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் கலக்கின்றன. மைக்ரோ நெகிழிகளை உண்ணும் கடல்வாழ் உயிரினங்களை மனிதர்கள் உண்ணும் போது அவை மனிதர்களுக்கும் பாதிப்பை விளைவிக்கின்றன.
 
5.png
மனித உணவில் மைக்ரோ நெகிழிகள்
  
எனவே இந்த மைக்ரோ நெகிழிகள் நாம் உண்ணும் உணவு, பருகும் நீர் மற்றும் சுவாசிக்கும் காற்று என உணவுச் சங்கிலியில் இடம்பெற்று உள்ளது.
 
விலங்குகள் மற்றும் பறவைகள் பாதிக்கப்படுதல்:
 
shutterstock_1651011709.jpg
கால்நடைகள் உணவு என்றெண்ணி நெகிழியை உண்ணுதல்
  
நாம் மீதம்முள்ள உணவுப் பொருட்களை பாலிதீன் பையில் வைத்து குப்பையில் எரிவதால் அவற்றை மாடு மற்றும் ஆடுகள் உணவு என்றெண்ணி உட்கொள்கின்றன. இதனால் அவ்விலங்குகளின் செரிமான உறுப்புகள் பாதிப்படைந்து இறக்க நேரிடுகின்றன.
பறவைகளும் கடல் மற்றும் நீரோடைகளில் மைக்ரோ நெகிழிகளை கொண்ட பாசிகளை உட்கொள்வதால் வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டு பட்டினியால் மடிகின்றன.
 
தமிழ்நாடு அரசின் நடவடிக்கை:
  
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டு எறியப்படும் நெகிழிப்பொருள்களை தடை செய்துள்ளது  தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் நெகிழியின் பயன்பாட்டை குறைக்கலாம்.
 
பாலிலாக்டிக் அமிலம் (PLA) நெகிழிகள்:
 இது நெகிழிக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டது. இது உரமாகும் தன்மை கொண்ட உயிர்ப்புத்திறன் கொண்ட வெப்பத்தால் இளகும் நெகிழி ஆகும்.
இந்த நெகிழி சோளம், கரும்பு மற்றும் இனிப்புச்சுவை கொண்ட கிழங்குகளின் கூழ்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
 
shutterstock665291797w300.jpg
PLA நெகிழிப்பொருட்கள்
 
இதனைப் பயன்படுத்தி உணவுப் பொட்டலக் கலன்கள், குப்பைபைகள் மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சமையல் மற்றும் உணவு மேசை கருவிகள் போன்றவற்றை தயாரிக்கலாம்.