PDF chapter test TRY NOW
ஒளி உருவாதல்
மெழுகுவர்த்தியை ஏற்றும்பொழுது அது எரிந்து ஒளியை (வெளிச்சத்தை) உருவாக்குகிறது, இதுபோல சில வேதி வினைகளும் ஒளியை உருவாக்குகின்றன.
ஒளி உருவாதல்
உதாரணமாக, ஒரு மெக்னீசியம் நாடாவின் சிறு துண்டினை நெருப்புச்
சுடரில் காட்டும்பொழுது அது எரிந்து கண்ணைக்
கூசச்செய்யும் ஒளியையும் மற்றும் வெப்பத்தையும் கொடுக்கிறது.
ஒளி - ஒலி உருவாதல்
விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் மத்தாப்புகள்
மற்றும் பட்டாசுகளும் பல்வேறு வண்ண ஒளி மற்றும் ஒலியையும் உருவாக்குகின்றன, இந்த நிகழ்வுகள் அனைத்தும் வேதிவினைகளால் நடைபெறுகின்றன.
ஒலி உருவாதல்
நாம் பாடும் பொழுது மற்றும் பேசும்பொழுது ஒலியை உருவாக்குகிறோம், இசைக் கருவிகள் இசைக்கும் பொழுதும்,இரும்பு, காப்பர், மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களைத் தட்டும் பொழுதும் ஒலியைக் கேட்கிறோம்.
ஒலி உருவாதல்
இதே போல, சில வேதிவினைகளும் ஒலியை உருவாக்குகின்றன. விழாக்களில் மற்றும் தீபாவளிக்
கொண்டாட்டத்தில் வெடிகளைப் பற்ற
வைக்கும்போது என்ன நடைபெறுகிறது?
வெடிகளில் உள்ள வேதிப்பொருள்கள் வினைபுரிந்து
வெடித்து ஒலியை உருவாக்குகின்றன.
ஜிங்க் மற்றும் மெக்னீசியம் போன்ற
உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன்
வினைபட்டு ஹைட்ரஜன் வாயுவை
வெளிவிடுகின்றன. இந்த ஹைட்ரஜன் வாயு எளிதில்
தீப்பிடிக்கும் தன்மை கொண்டதால் அது காற்றில்
உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து ‘பாப்’ என்ற
ஒலியை உருவாக்குகிறது.
அழுத்தம் உருவாகுதல்
முழுவதும் காற்று அடைக்கப்பட்ட ஒரு பலூனை அழுத்தினால் அது வெடித்துவிடும், ஏனெனில் அழுத்துவதன் மூலம் அழுத்தம் அதிகமாகி பலூனின் உள்ளே உள்ள காற்று வெளியேற முயற்சிக்கிறது. இதன் காரணமாக, பலூன் வெடிக்கிறது.
இதேபோல சில வேதிவினைகள் மூடிய கலனில்
நிகழும்பொழுது வாயுக்களை உருவாக்கி அதன்
காரணமாக அழுத்தம் அதிகமாகிறது, அந்த அழுத்தம் ஒரு
குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகும் பொழுது கலன்
வெடிக்கிறது.
அழுத்தம் உருவாகுதல்
பட்டாசுகளும், வெடிகுண்டுகளும் அழுத்தம் காரணமாகவே வெடிக்கின்றன, இவற்றைப்
பற்றவைக்கும்பொழுது அதிக அழுத்த வாயுக்கள் உருவாகி அழுத்தம் ஏற்பட்டு அவை வெடித்துச் சிதறுகின்றன.
எனவே, அதிக அளவிலான ஒலி கேட்கிறது.