PDF chapter test TRY NOW

ஒரு வேதிவினை நடைபெறுவதற்கான ஏதேனும் மூன்று நிபந்தனைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
 
ஒரு வேதிவினை நடைபெற சில குறிப்பிட்ட காரணிகள் அல்லது சூழ்நிலைகள் வேண்டும். வேதிவினைகள் கீழ்க்காணும் பல்வேறு சூழ்நிலை காரணிகளால் நிகழலாம்.
 
இயல்பான நிலையில் சேர்தல், வினைபடு பொருள்களின் கரைசல், மின்சாரம், வெப்பம், ஒளி, மற்றும் வினைவேகமாற்றி
 
இயல்பான நிலையில் சேர்தல்
 
திண்மம், திரவம், மற்றும் வாயு போன்ற அதன் இயல்பான நிலையில் இருந்து வினையில் ஈடுபடுவதுவே இயல்பான நிலையில் சேர்தல் என்று அழைக்கப்படுகின்றது.
 
தேநீர் மற்றும் கொட்டை வாடிநீர் (காபி) இவற்றின் தயாரிப்பு முறையே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்கு பால் மற்றும் காஃபி துகள்களும் சேர்ந்து இருந்து எந்த ஒரு மாற்றமும் அடையாமல் அவற்றின் சேர்க்கின்றது.
 
மின்சாரம்
 
மின்சாரத்தினைக் கொண்டு மட்டுமே நடைபெறும் வேதிவினைகள் மின்வேதி அல்லது மின்னாற்பகுத்தல் வினைகள் என்று அழைக்கப்படும்.
 
பிரைன் எனப்படும் அடர்  கரைசல் வழியே மின்சாரம் செலுத்தும் போது அவை சோடியம் ஹைட்ராக்சைடுடன் சேர்ந்து குளோரின் மற்றும் வாயுக்களை வெளிவிடுகின்றன. இவ்வினை மின்வேதி வினைக்கான எடுத்துக்காட்டாகும்.
 
வெப்பம்
 
வெப்பத்தின் மூலமாக நடைபெறும் வேதிவினைகள் வெப்பவேதி வினைகள் என்று அழைக்கப்படும்.
 
எடுத்துக்காட்டாக ஒரு உலர்ந்த சோதனைக் குழாயில் உப்பினை எடுத்து அதனை சுடரில் காட்டி வெப்பப்படுத்தும் போது, அது படபடவென்று வெடித்து செம்பழுப்பு  நிற வாயு () வெளிவருவதைக் காணலாம். எனவே வெப்பத்தின் மூலம் நடைபெறுவதால் இது ஒரு வெப்ப வேதிவினையாகும்.