PDF chapter test TRY NOW
வளைவு ஆடியின் பயன்கள்:
குழி ஆடிகள்:
- குழி ஆடிகள் பெரிதான பிம்பத்தை உருவாக்குவதால் ஒப்பனைக் கண்ணாடியாகவும், முகச் சவரக் கண்ணாடியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
![90-1.jpg](https://resources.cdn.yaclass.in/26053268-23f6-4c9c-b558-907762580e24/901w300.jpg)
- குழி ஆடிகள் ஒளியை நீண்ட தூரத்திற்குப் பரவச் செய்வதால் டார்ச் விளக்குகள், தேடும் விளக்குகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் பயன்படுகின்றன.
![90-2.jpg](https://resources.cdn.yaclass.in/b73ab781-5fed-4199-94e0-100cd0accd1d/902w300.jpg)
- குழி ஆடிகள் பரந்த பரப்புகளிலிருந்து ஒளியினைச் சேகரித்து, ஒரு புள்ளியில் குவியச் செய்கின்றன. எனவே, இவ்வகை ஆடிகள் சூரிய சமையற்கலன்களில் பயன்படுகின்றன.
- நிழலை ஏற்படுத்தாமல் உறுப்புகளைத் தெளிவாகக் காட்டுவதால், கண், காது, மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியினைச் சோதித்துப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் அணிந்திருக்கும் தலைக் கண்ணாடிகளில் குழி ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
![90-4.jpg](https://resources.cdn.yaclass.in/314a8e89-b85a-4866-b72a-b87585607e45/904w300.jpg)
- குழி ஆடிகள் எதிரொளிக்கும் தொலைநோக்கிகளிலும் பயன்படுகின்றன.
![90-5.jpg](https://resources.cdn.yaclass.in/01906683-e0ac-4bc6-91a3-9117264565ac/905w377.jpg)
குவி ஆடிகள்:
- குவி ஆடிகள் வாகனங்களில் பின் காட்சி ஆடிகளாகப் பயன்படுகின்றன. இவை வெளிப்புறம் வளைந்திருப்பதால் நேரான பிம்பம் மற்றும் அகன்ற பார்வைப் புலத்தைத் தருகின்றன.
![90-6.jpg](https://resources.cdn.yaclass.in/1e6b5850-d4ec-4ef3-befd-97045d797763/906.jpg)
- இவை மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் அங்காடிகளில் பயன்படுகின்றன. பெரும்பாலும் குறுகிய வளைவுகள் கொண்ட கட்டடத்தின் சுவர்கள் அல்லது கூரைகளில் இந்த ஆடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
![90-7.jpg](https://resources.cdn.yaclass.in/8616bf26-ebd9-48cf-a194-dfc88ebccf2c/907w300.jpg)
- சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் குவி ஆடிகள் பயன்படுகின்றன.
![90-8.jpg](https://resources.cdn.yaclass.in/1a3626f8-0dab-41b8-87e7-d136dfd74f85/908w300.jpg)
Reference:
https://www.flickr.com/photos/danielfoster/28103245915/
https://pixabay.com/photos/headlamp-accident-auto-blue-broken-2940/
https://pixabay.com/photos/headlamp-accident-auto-blue-broken-2940/
https://pxhere.com/en/photo/1495099
https://commons.wikimedia.org/wiki/File:VM_5347_G209_north_of_Muyu_-_mirror_at_a_hairpin_bend.jpg