PDF chapter test TRY NOW
கோளக ஆடிகள் வளைவு ஆடிகளின் ஒரு வகை ஆகும். வளைவு ஆடி ஒரு கோளத்தின் ஒரு பகுதியாக இருந்தால், அது ஒரு ‘கோளக ஆடி’ என்று அழைக்கப்படுகிறது.
கோளக ஆடியானது ஒரு கோளத்தின் மேற்பரப்பிலிருந்து வெட்டப்பட்ட சிறுபகுதியினைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். இந்த ஆடியின் ஒரு பகுதியில் வெள்ளிப்பூச்சு பூசப்பட்டிருக்கும், மறுபுறம் ஒளி எதிரொளிப்பு நிகழ்கிறது.
கோளக ஆடிகள் இரண்டு வகைப்படும்.
- குழி ஆடி
- குவி ஆடி
கோளக ஆடிகள்
குழி ஆடி:
ஒரு கோளக ஆடியின் குழிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால், அது குழி ஆடி என அழைக்கப்படுகிறது. இவ்வகை ஆடிகளால் உருவாக்கப்படும் பிம்பம் பொருளினைப் பெரிதாக்கிக் காட்டுகிறது.
குழி ஆடி
உதாரணம் - ஒப்பனைக்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடி.
குழி ஆடிக்கான உதாரணம்
குவி ஆடி:
ஒரு கோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால் அது குவி ஆடி என அழைக்கப்படுகிறது. இவ்வகை ஆடிகளால் உருவாக்கப்படும் பிம்பம் பொருளின் அளவைவிடச் சிறியதாக இருக்கும்.
குவி ஆடி
உதாரணம் - பின்புறம் வரக்கூடிய பிற வாகனங்களைக் காண்பதற்காக வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஆடி.
குவி ஆடிக்கான உதாரணம்
Important!
உங்களுக்கு தெரியுமா?
வாகனங்களில் பின்புற பார்வைக் கண்ணாடியாகப் பயன்படுத்தப்படும் குவி ஆடிகளால் ‘இக்கண்ணாடியில் தோன்றும் பிம்பமானது அதன் உண்மைத் தொலைவை விட அருகில் உள்ளது’ என்ற எச்சரிக்கை வாசகம், எழுதப்பட்டிருக்கும். ஏனெனில், கண்ணாடியில் பார்க்கும்போது வாகனங்கள் வெகு தொலைவில் வருவது போல் நமக்குத் தோன்றும்.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Mirror_MET_141134.jpg
https://www.flickr.com/photos/shareski/3786803863
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d3/Wing_mirror.jpg
https://www.flickr.com/photos/shareski/3786803863
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d3/Wing_mirror.jpg