PDF chapter test TRY NOW

இந்த செயல்பாட்டின் மூலம் இரண்டு கண்ணாடிகளின் கோணம் ஒரு பொருளின் எதிரொளிப்பை எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் கண்டறியலாம்.
 
செயல்பாடு:
  • இரண்டு சமதள ஆடிகளை எடுத்துக் கொள்க.
  • அவற்றை ஒன்றுக்கொன்று செங்குத்தாகப் பொருத்தி, அவற்றிற்கு இடையில் ஒரு பொருளை வைக்கவும்.
  • இப்போது கண்ணாடிகளில் பிம்பங்களைக் காண இயலும்.
அவற்றில் எத்தனை பிம்பங்களை உங்களால் காண முடிகிறது?
 
உங்களால்  மூன்று பிம்பங்களைக் காண முடியும்.
 
இரண்டு கண்ணாடிகளைக் கொண்டு எவ்வாறு மூன்று பிம்பங்களை உருவாக்க முடிகிறது?
 
மேற்கண்ட செயல்பாட்டிலிருந்து இரு சமதள ஆடிகளுக்கிடையே ஒரு பொருளை வைக்கும் போது அவற்றிற்கு இடைப்பட்ட சாய்வுக் கோணம் அதிக எண்ணிக்கையிலான பிம்பங்களை ஏற்படுத்துகிறது என்பதனை உங்களால் அறிய முடிகிறது.
 
இவ்வாறு தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையானது கண்ணாடிகளுக்கு இடைப்பட்ட கோணத்தின் மதிப்பினைச் சார்ந்தது. \(\theta\) (தீட்டா) என்பது சமதளக்கண்ணாடிகளுக்கு இடைப்பட்டக் கோணம்எனில், தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை 360oθ1 ஆகும்.
 
மேற்கண்ட செயல்பாட்டில்  இரண்டு சமதள ஆடிகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருப்பதால்,
 
சாய்வுக் கோணம் (\(\theta\)) \(=\) \(90°\)
 
தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை \(=\) 360oθ1
=360oθ1=360o90o1=41=3
தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை \(=\) \(3\)
 
130-1.png
ஒரு கண்ணாடியால் உருவாக்கப்பட்ட பிம்பமானது, மற்றொரு கண்ணாடிக்குப் பொருளாக உள்ளது. அதாவது, முதல் கண்ணாடியில் தோன்றும் பிம்பம், இரண்டாவது கண்ணாடிக்குப் பொருளாக அமைகிறது. இதே போல், இரண்டாவது கண்ணாடியில் தோன்றும் பிம்பம் முதல் கண்ணாடிக்குப் பொருளாக அமைகிறது. ஆகவே, ஒரு பொருளுக்கு மூன்று பிம்பங்கள் தோன்றுகின்றன.
இதன் மூலம் இரு சமதள ஆடிகளுக்கிடையே ஒரு பொருளை வைக்கும் போது அவற்றிற்கு இடைப்பட்ட சாய்வுக் கோணம் அதிக எண்ணிக்கையிலான பிம்பங்களை ஏற்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்பட்டது.
Reference:
http://physicswith5jaya.blogspot.com/2012/01/students-set-up-two-plane-mirrors.html