PDF chapter test TRY NOW

அனைத்துப் பொருள்களும் ஒளியை எதிரொளிப்பதில்லை என்பதனை நாம் பயின்றுள்ளோம். ஒளி எதிரொளிக்கும் அளவானது எதிரொளிக்கும் பொருளின் பரப்பைச் சார்ந்தது. எதிரொளிக்கும் பரப்பின் தன்மையைப் பொருத்து எதிரொளித்தலை இரண்டாக நாம் வகைப்படுத்தலாம். அவை:
  • ஒழுங்கான எதிரொளிப்பு மற்றும்
  • ஒழுங்கற்ற எதிரொளிப்பு
ஒழுங்கான எதிரொளிப்பு:

ஓர் ஒளிக்கற்றையானது (இணை ஒளிக்கதிர்களின் தொகுப்பு) வழவழப்பான பரப்பின் மீது விழும் போது அது எதிரொளிக்கப்படுகிறது. எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.
 
110-1.jpg
 
இந்த எதிரொளிப்பில் ஒவ்வொரு ஒளிக்கதிரின் படுகோணமும் எதிரொளிப்புக் கோணமும் சமமாக இருக்கும்.
 
1.png
  
இதில் எதிரொளித்தல் விதி பின்பற்றப்படுவதால், தெளிவான பிம்பம் கிடைக்கிறது. இவ்வகை எதிரொளிப்பு ’ஒழுங்கான எதிரொளிப்பு’ அல்லது ’கண்ணாடி எதிரொளிப்பு’ எனப்படும்.
 
110-2.jpg
Example:
சமதள ஆடியில் உருவாகும் எதிரொளிப்பு மற்றும் நிலையான தண்ணீரில் ஏற்படும் எதிரொளிப்பு.
ஒழுங்கற்ற எதிரொளிப்பு:

பொருளானது சொரசொரப்பான அல்லது ஒழுங்கற்ற பரப்பைக் கொண்டிருக்கும் போது, அப்பரப்பின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு கோணத்தில் அமைந்திருக்கும்.
 
ஒளியானது அத்தகைய பரப்பின் மீது விழும் போது ஒவ்வொரு ஒளிக்கதிரும் வெவ்வேறு கோணத்தில் எதிரொளிக்கின்றன.
 
110-3.jpg
 
இங்கு ஒவ்வொரு ஒளிக்கதிரின் படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமமாக இருக்காது. ஒளி எதிரொளிப்பு விதிகள் இதில் பின்பற்றப்படாததால் தெளிவான பிம்பம் கிடைப்பதில்லை. இத்தகைய எதிரொளிப்பு ’ஒழுங்கற்ற எதிரொளிப்பு’ அல்லது ’விரவலான எதிரொளிப்பு’ எனப்படும்.
 
110-4.jpg
Example:
சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு.
Reference:
https://pxhere.com/en/photo/1005872
https://pixabay.com/photos/trees-water-reflection-nature-3956633/
https://commons.wikimedia.org/wiki/File:Still_Water_At_Dusk.jpg