PDF chapter test TRY NOW

நிறப்பிரிகை ஏன் ஏற்படுகிறது?
வெண்மை நிற ஒளியானது ஒளி ஊடுருவும் ஊடகத்தின் வழியே செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் (அலைநீளம்) பிரிகை அடைகிறது. இதனையே ’நிறப்பிரிகை’ என்றழைக்கிறோம்
வெண்மை நிற ஒளியில் உள்ள வெவ்வேறு வண்ணங்கள் வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்டுள்ளன. மேலும், அவை வெவ்வேறு ஊடகத்தில் வெவ்வேறு திசைவேகத்தில் செல்லக்கூடியவை. ஓர் ஊடகத்தின் ஒளிவிலகலானது அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தை பொருத்து அமையும்.
 
ஒவ்வொரு வண்ண ஒளியும் வெவ்வேறு திசைவேகத்தைக் கொண்டுள்ளதால், வெவ்வேறு வண்ண ஒளிக்கதிர்கள் முப்பட்டகத்திற்குள் வெவ்வேறு திசைகளில் விலகலடைந்து பிரிகை அடைகின்றன. மேலும், ஒளிவிலகல் ஒளியின் அலைநீளத்திற்கு எதிர்த் தகவில் இருக்கும்.
 
எனவே,
குறைந்த அலைநீளத்தை கொண்டுள்ள ஊதா நிறக் கதிர் அதிக அளவு விலகலையும், அதிக அலைநீளத்தைக் கொண்டுள்ள சிவப்பு நிற ஒளிக் கதிரானது குறைந்த விலகலையும் கொண்டுள்ளது.
6.png
 
Important!
உங்களுக்குத் தெரியுமா?
 
வானவில் தோற்றம் வெண்மை நிறக் கதிரின் நிறப்பிரிகைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
வானவில்லை சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் காணமுடியும். எண்ணற்ற நீர்த் துளிகள் மழைக்குப் பிறகு காற்றில் மிதந்து கொண்டிருக்கும். ஒளியானது இவற்றின் வழியாக செல்லும்போது, அது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது. அதிக அளவு மழைத் துளிகளில் வெண்மை நிற ஒளியின் நிறப்பிரிகையானது நிகழ்வதால் இறுதியில் வானவில் உருவாகிறது.
8.png