PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஎரிதல்:
ஆக்ஸிஜன் தானாக எரியும் தன்மை அற்றது. ஆனால் பிற எரிபொருட்கள் எரிய துணைபுரிகிறது
ஆக்ஸிஜன் தானாக எரியும் தன்மை கொண்டிருந்தால் நமது வளிமண்டலத்தில் உள்ள மொத்த ஆக்ஸிஜனும் எரிய ஒரு தீக்குச்சி போதுமானதாக இருக்கும்.
உலோகங்களுடன் வினை:
ஆக்ஸிஜன் உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் உலோக ஆக்சைடுகளைத் தருகிறது.இவை பொதுவாக காரத்தன்மை உடையவை.ஆனால் ஆக்ஸிஜனுடன் ஒவ்வொன்றும் வேறுபட்ட வினைதிறனுடன் செயல்புரிகின்றன.
உலோகம் + ஆக்ஸிஜன் —→ உலோக ஆக்சைடு
உலோகங்கள்: Na, K, Mg, Ca, Fe,Cu,Ag,Au,pt,etc
வெப்பநிலை | வேதிவினை |
அறை வெப்பநிலை | Na(சோடியம்)+\(O_2\) —→\(Na_2O\) (சோடியம் ஆக்ஸைடு) K(பொட்டாசியம்) + \(O_2\) —→ \(K_2O\) (பொட்டாசியம் ஆக்ஸைடு) |
மிதமான வெப்பநிலை | Mg(மெக்னீசியம்) + \(O_2\) —→ MgO (மெக்னீசியம் ஆக்ஸைடு) Ca (கால்சியம்) + \(O_2\) —→ (CaO) (கால்சியம் ஆக்ஸைடு) |
அதிகவெப்பநிலை | Fe (அயர்ன்) + \(O_2\) —→ \(Fe_3O_4\) (அயர்ன் ஆக்ஸைடு) Cu (காப்பர்) + \(O_2\) —→ CuO (காப்பர் ஆக்ஸைடு) Ag(சில்வர்) + \(O_2\) —→ \(Ag_2O\) (சில்வர் ஆக்ஸைடு) Au(தங்கம்) + \(O_2\) —→ No reaction pt (ப்ளாட்டினம்) + \(O_2\) —→ No reaction |
அலோகங்களுடன் வினை:
ஆக்ஸிஜன் அலோகங்களுடன் வினைபுரிந்து அலோக ஆக்ஸைடுகளைத் தருகிறது. இவை அமிலத்தன்மையை கொண்டிருக்கும்.
அலோகங்கள் + ஆக்ஸிஜன் —→ அலோக ஆக்ஸைடுகள்
அலோகங்கள்: C, N , S, P ,ect.
C (கார்பன்) + \(O_2\) —→ \(CO_2\) (கார்பன்-டை-ஆக்ஸைடு)
N (நைட்ரஜன்) + \(O_2\) —→ NO (நைட்ரிக் ஆக்ஸைடு)
S (சல்பர்) + \(O_2\) —→ \(SO_2\) (சல்பர் ஆக்ஸைடு)
P (பாஸ்பரஸ்) + \(O_2\) —→ \(P_2O_3\) (பாஸ்பரஸ் ட்ரை ஆக்ஸைடு) அல்லது \(P_2O_5\) (பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு)
ஹைட்ரோகார்பன்களுடன் வினை:
கார்பனையும் ஹைட்ரஜனையும் கொண்டுள்ள சேர்மங்கள் ஹைட்ரோகார்பன்கள் எனப்படுகின்றன. இவை ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கார்பன்-டை-ஆக்ஸைடையும் நீராவியையும் உருவாக்குகின்றன.
உதாரணம்: மரம், பெட்ரோல், டீசல், கேஸ், etc.,
ஹைட்ரோகார்பன் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்த வெப்பம் மற்றும் ஒளியினை தருகின்றன. ஹைட்ரோகார்பன்கள் சிறந்த எரிபொருளாக பயன்படுகின்றன.
ஹைட்ரோகார்பன் + \(O_2\) —→ வெப்பம் + ஒளி + நீராவி
துருப்பிடித்தல்:
காற்று மற்றும் ஈரப்பதமான இடத்தில் இரும்பு அதன் நீரேறிய ஆக்ஸைடாக மாறும். இந்த நிகழ்வினை இரும்பு துருபிடித்தல் என்கிறோம்.
துரு என்பது நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு ஆகும்.
(காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவினைப் பொருத்து இரும்பு துருப்பிடித்தலின் அளவு இருக்கும்)
4Fe + 3 \(O_2\) —→ 2\(Fe_2O_3\)
\(Fe_2O_3\) + X \(H_2O\) —→ \(Fe_2O_3.XH_2O\) (துரு)
இதில் X என்பது வேறுபட்ட நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.