PDF chapter test TRY NOW
வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களின் கலவையே காற்று ஆகும். இது அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ இன்றியமையாத ஒன்று ஆகும்.
மனிதர்கள் மற்றும் விலங்குகள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை (\(O_2\)) சுவாசித்து கார்பன்-டை-ஆக்ஸைடினை (\(CO_2\)) வெளியே விடுகின்றன. தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடின் மூலம் ஒளிச்சேர்க்கை செய்து ஆக்ஸிஜனை வெளியே விடுகின்றன.
காற்றின் பயன்கள்
குறிப்பு: மனிதர்கள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை நுரையீரல் மூலம் உள்ளிழுத்து கார்பன்-டை-ஆக்ஸைடினை வெளிவிடும் நிகழ்வினை நாம் சுவாசித்தல் என்கிறோம்.
காற்றில் உள்ள வாயுக்களின் கலவை:
காற்றானது நைட்ரஜன் (\(N_2\)), ஆக்ஸிஜன் (\(O_2\)), கார்பன்-டை-ஆக்ஸைடு (\(CO_2\)), மற்றும் இதர வாயுக்களின் கலவையாகும்
வாயுக்களின் கலவை
நமது சுற்றுச்சூழல் மிகுந்த வெப்பத்துடன் இருப்பதற்கான காரணம் என்ன?
மனிதர்கள் தங்கள் தேவைக்காக அதிக அளவிலான மரங்களை வெட்டுகின்றனர். இதனால் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கிறது. இதனால் புவியின் வெப்பநிலையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
புவி வெப்பமாதல்
மனிதர்களின் செயல்பாடுகளுக்கும் புவி வெப்பமாதல் மற்றும் அமில மழைக்கும் உள்ள தொடர்பு?
அமில மழை
தொழிற்சாலைகளிலிருந்தும் வாகனங்களிலிருந்தும் வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகியவை வளிமண்டலத்தில் சேர்கின்றன. இவை காற்று மற்றும் நீரினை மாசுபடச் செய்கின்றன. மேலும் இவை காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் இதர பொருட்களுடன் சேர்ந்து சல்ப்யூரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலத்தினை உற்பத்தி செய்கிறது. இவையே புவி வெப்பமயமாதல் மற்றும் அமில மழைக்கு காரணம் ஆகும்.