PDF chapter test TRY NOW

இரண்டு எலும்புகள் இணையும் போது மூட்டுகள் உருவாகின்றன என்று படித்தோம். இந்த கோட்பாட்டில் நகரக் கூடிய மூட்டுகளின் வகைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
 
நகரக் கூடிய மூட்டுகளின் வகைகள்:
 
இவ்வகை மூட்டுகளில் வெவ்வேறு வகையான அசைவுகள் உள்ளன.  இவற்றில் மொத்தம் ஆறு வகை மூட்டுகள் உள்ளன. அவையாவன;
  1. பந்து கிண்ண மூட்டு
  2. கீல் மூட்டு
  3. முளை அச்சு மூட்டு
  4. முண்டணையா மூட்டு
  5. வழுக்கு மூட்டு
  6. சேண மூட்டு
YCIND20220901_4386_Movements in animals_01.png
நகரக் கூடிய மூட்டுகளின் வகைகள்
  
பந்து கிண்ண மூட்டு:
  • இவை பந்தின் முனை போன்ற தலைப்பகுதியைக் கொண்டிருக்கும். அவை அதன் அருகிலுள்ள கிண்ணம் போன்ற எலும்புடன் இணைந்தே இருக்கும்.
  • இதன் இயக்கமானது அதாவது அசையும் தன்மை மூன்று வெவ்வேறு திசைகளில் நடைபெறுகின்றது.
  • இவ்வகை மூட்டுகளில் இயக்கங்கள் பெரிய அளவில் நடைபெறும்.
Example:
தோள்பட்டை மற்றும் இடுப்பு எலும்பு
கீல் மூட்டு:
  • கீல் மூட்டு வகையில் எலும்பின் புடைப்பு உருளை வடிவில் இருக்கும். மேலும் இவை அருகிலுள்ள எலும்பின் குழி போன்ற பகுதியில் பொருந்தி இருக்கும்.
  • இவற்றில் இயக்கம் ஒரு திசையில் மட்டுமே இருக்கும்.
  • இவ்வகை மூட்டுகள் வளைக்கவும், நேராக்கவும் மட்டுமே பயன்படுகின்றன.
Example:
முழங்கால், முழங்கை மற்றும் கணுக்கால்
முளை அச்சு மூட்டு:
  • இவை சுழல் அச்சு மூட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
  • கூர்மையான அல்லது உருண்டை வடிவம் கொண்ட எலும்பு, வளைய வடிவம் கொண்ட எலும்பான ஆர முன்கை எலும்புடன் இணைந்திருக்கும்.
  • இயக்கம் ஒரு திசையில் மட்டுமே இருக்கும்.
  • இவ்வகை மூட்டுகள் நீளமான அச்சை மாத்திரமே பற்றிச் சுழல அனுமதிக்கும்.
Example:
முள்ளெலும்பு சுழல், அச்சு முனை மூட்டு
முண்டணையா மூட்டு:
  • இவை பந்து கிண்ண மூட்டை போன்று இருக்கும். ஆனால் இணையும் பகுதியில் தட்டையான பரப்பைக் கொண்டு ஆழமான மூட்டை உருவாக்கும்.
  • இவை இரு திசைகளில் இயக்கம் நடைபெற அனுமதிக்கின்றது.
  • இரண்டாவது பெரிய அளவிலான இயக்கம் இவ்வகை மூட்டுகளில் தான் நடைபெறுகின்றது.
Example:
மணிக்கட்டு
வழுக்கு மூட்டு:
  • இவ்வகை மூட்டுகள் முதுகெலும்புகளின் செயல்பாட்டில் உள்ளது.
  • ஏறத்தாழ தட்டையான, ஒத்த மேற்பரப்பு உடையது.
  • வழுக்கு மூட்டு வகையில் அசைவு அதாவது இயக்கம் மூன்று கோணத்தில் நிகழ்கிறது.
Example:
முள்ளெலும்பு
சேண மூட்டு:
  • இவற்றின் ஒரு முனை குழிந்து அதாவது உட்புறமாக திரும்பி சேணம் போலக் காட்சியளிக்கும். மறுமுனையானது வெளிப்புறமாகக் குவிந்து அதில் சவாரி செய்வது போல இருக்கும்.
  • நெகிழ்வு - நீட்டிப்பு, கடத்துதல் - சேர்க்கை இயக்கங்கள் போன்றவை காணப்படும்.
Example:
கட்டை விரல், தோள் பட்டை, உட்செவி