PDF chapter test TRY NOW
எலும்பு மண்டலம் என்பது உடல் இயங்குவதற்குத் தேவையான எலும்புகள் மற்றும் அதனோடு தொடர்புடைய கட்டமைப்புகளால் ஆனதாகும்.
எலும்புக்கூடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- அச்சு எலும்புக்கூடு
- இணையுறுப்பு எலும்புக்கூடு
அச்சு எலும்புக்கூடு:
மனித உடலில் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்திருக்கும் எலும்புகளைக் கொண்டது அச்சு எலும்புக்கூடு மண்டலம் ஆகும்.
Example:
மண்டை ஓடு, முக எலும்புகள், ஸ்டெர்னம் (மார்பு எலும்பு), விலா எலும்பு, முதுகு எலும்பு தொடர் போன்றவை அச்சு எலும்புக்கூட்டில் உள்ளன.

அச்சு எலும்புக்கூடு
இணையுறுப்பு எலும்புக்கூடு:
மனித உடலில் இருக்கும் இணை உறுப்புகளிலுள்ள எலும்புகள் மற்றும் அவற்றை அச்சு எலும்புக் கூட்டுடன் இணைக்கும் பிற எலும்புகள் கொண்ட கட்டமைப்பு இணையுறுப்பு எலும்புக்கூடு எனப்படும்.
Example:
தோள்பட்டை எலும்பு, கை, மணிக்கட்டு, மேற்கை எலும்புகள், இடுப்பு, கால், கணுக்கால், பாத எலும்புகள்.

இணையுறுப்பு எலும்புக்கூடு