PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடானது திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தம் மற்றும் திரவத்தம்பத்தின் உயரம் இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பை விவரிக்கிறது.
செயல்பாடு:
இருபுறமும் திறப்புகள் கொண்ட ஒரு கண்ணாடிக்குழாயை எடுத்துக்கொண்டு ஒரு புறம் பலூனைப் பொருத்தி, மறுபுறம் நீரை ஊற்றவும்.
பலூனை உற்றுநோக்கவும்.
தற்போது மேலும் சிறிது நீரை ஊற்றி பலூனை உற்று நோக்கவும்.
பலூன் வெளிப்புறமாக விரிவடைகிறது.
இந்த செயல்பாட்டின் மூலம் கொள்கலனின் அடிப்பாகத்தில் திரவத்தினால் செலுத்தப்படும் அழுத்தம் அதன் திரவத்தம்ப உயரத்தினைச் சார்ந்தது என்பது உறுதியாகிறது.
செயல்பாடு:
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ளவும்.
அதன் அடிப்பகுதியிலிருந்து சம அளவு உயரத்தில் சம அளவுடைய மூன்று துளைகளை இடவும்.
பாட்டிலை நீரால் நிரப்பி துளைகளின் வழியாக வெளியேறும் நீரை உற்றுநோக்கவும்.
அனைத்துத் துளைகளின் வழியாக சம விசையுடன் நீரானது வெளியேறுவதையும், பாட்டிலில் இருந்து ஒரே தொலைவில் அது தரையில் விழுவதையும் காணலாம்.