PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉராய்வை அதிகரித்தல் மற்றும் குறைத்தல்:
அ. தொடுபரப்பு:
உராய்வை, தொடுபரப்பை அதிகரிப்பதன் மூலம் அதிகரிக்கலாம்.
Example:
மிதிவண்டியில் சக்கரத்தின் உள்விளிம்பிற்கு மிகவும் அருகில் தடைக் கட்டைகளை அமைப்பதன் மூலம், தடை செயல்படுத்தப்படும்போது உராய்வு அதிகரித்து மிதிவண்டி உடனே ஓய்வு நிலையை அடையும்.
ஆ. உயவுப் பொருள்களைப் பயன்படுத்துல்:
உயவுப் பொருள் என்பது உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் எனப்படும்.
Example:
கிரீஸ், தேங்காய் எண்ணெய், கிராஃபைட், விளக்கெண்ணெய் முதலியன.
ஒன்றையொன்று தொடர்புகொண்டுள்ள இரண்டு பொருள்களின் ஒழுங்கற்ற பரப்புகளுக்கு இடையில் உயவுப் பொருள்கள் சென்று அவற்றிற்கிடையே ஒரு வழவழப்பான உறை உருவாகிறது. இது இரு பரப்புகளுக்கு இடையேயான நேரடித் தொடர்பைத் தடுத்து உராய்வைக் குறைக்கிறது.
இ. பந்து தாங்கிகளைப் பயன்படுத்துதல்:
நழுவு உராய்வை விட உருளும் உராய்வு குறைவாக இருப்பதால், பந்து தாங்கிகளைக் கொண்டு நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம்.
இந்தக் காரணத்திற்காகவே மிதிவண்டிகளின் சக்கர அச்சில் காரீயத்தினாலான பந்துத் தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.