PDF chapter test TRY NOW

நம்மைச் சுற்றியுள்ள உலகில் பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அவை அவற்றின் கட்டமைப்புகள், வளரியல்பு, வாழிடம், உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து முறை மற்றும் உடலியல் ஆகியவற்றில் வேறுபடுகின்றன.
 
பல்வேறு ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளைக் கொண்டு உயிரினங்கள்  பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
 
Diversity_of_plants_image_version_q.png
பல விதமான தாவரங்களின் வகைகள்
 
தாவரம் (plant) என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும்  உயிரினப் பிரிவாகும். தாவரங்கள் பாரம்பரிய வகைப்பாட்டில், விதைகளை உற்பத்தி செய்யும் திறனின் அடிப்படையில் இரண்டு துணை உலகங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
 
Important!
ஏறத்தாழ \(8.7\) மில்லியன்  தாவர சிற்றினங்கள் பூமியின் மீது உள்ளன. அவற்றுள் \(6.5\) மில்லியன் சிற்றினங்கள் நிலத்திலும், \(2.2\) மில்லியன் சிற்றினங்கள் பெருங்கடல்களிலும் வாழ்கின்றன.
 
இந்த சிற்றினங்களுள் \(4\) இலட்சம் சிற்றினங்கள் பூக்கும் தாவரங்கள் ஆகும்.
தாவர உலகம்.png
தாவரங்களின் வகைப்பாடு

1. பூவாத் தாவரங்கள் (கிரிப்டோகேம்கள்)
  • தாலோஃபைட்டா
  • பிரையோஃபைட்டா
  • டெரிடோஃபைட்டா (விதையற்ற வாஸ்குலர் தாவரங்கள்)
2. பூக்கும் தாவரங்கள் (பெனரோகேம்கள்)
  • ஜிம்னோஸ்பெர்ம்கள் (கூம்பு விதை தாவரங்கள்)
  • ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் (பூக்கும் விதை தாவரங்கள்)
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/Diversity_of_plants_image_version_q.png/512px-Diversity_of_plants_image_version_q.png