PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இவை தாலோஃபைட்டா பிரிவைச் சார்ந்தவை. பூஞ்சையின் தாவர உடல் ஹைபாக்கள் எனப்படும் இழை போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட பூஞ்சை இழைகள் இணைந்து மைசீலியம் எனப்படும் இழைப் பின்னலை உருவாக்குகின்றன. இதன் தாவர உடலமானது வேர், தண்டு, இலை என பிரிக்கப்பட்டிருப்பதில்லை.
 
shutterstock1658506972fungalcellstructure.png
பூஞ்சையின் உடல் அமைப்பு
  
Important!
தாவரங்களின் செல் சுவர்செல்லுலோஸால் உருவானது. ஆனால், பூஞ்சைகளின் செல் சுவரானது ‘‘கைட்டின்’ எனப்படும் மூலப்பொருளால் உருவானது. இந்த கைட்டின் விலங்குங்களின்கொம்பு, முடி, மேல் ஓடு போன்றவற்றில் காணப்படும். பூஞ்சைகளின் உயிரணுக்களும் மரபணுக்களும் தாவரங்களைவிட மிருகங்களுடன் ஒத்துப் போகின்றன.
பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு ‘பூஞ்சையியல்’ (mycology) என்று பெயர்.
பூஞ்சைகள் பிற சார்பு உயிரி
பூஞ்சைகளின் உணவுப் பொருள்கள் கிளைக்கோஜனாகவும், எண்ணெயாகவும் சேமிக்கப்படுகின்றன. இவற்றில் ஸ்டார்ச் இருப்பதில்லை. ஏனெனில், பூஞ்சைகளில் பச்சையம் கிடையாது. எனவே, இவை பிற சார்பு உயிரிகளாக உள்ளன.
 
பிற சார்பு உயிரிகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
  • ஒட்டுண்ணிகள்
  • மட்குண்ணிகள்
  • இணைப்புயிரிகள்
1. ஒட்டுண்ணிகள்
 
இவை ஹாஸ்டோரியா எனப்படும் உறிஞ்சு உறுப்புகள் மூலம் உயிருள்ள பொருள்களிலிருந்து உணவைப் பெறுகின்றன. எ.கா. செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா (வேர்க்கடலைச் செடியைப் பாதித்து, டிக்கா நோயை உருவாக்குகிறது).
 
367381678503f9150b3cow1760.jpg
டிக்கா நோய் பாதித்த வேர்க்கடலைச் செடி
  
2. மட்குண்ணிகள்
 
இறந்த மற்றும் அழுகிய பொருள்களின் மீது வாழ்ந்து அவற்றிலிருந்து உணவைப் பெறுகின்றன. எ.கா. ரைசோபஸ்
 
Blackmoldrhizopusspw1944.jpg
ரைசோபஸ் 
 
3. இணைப்புயிரிகள்
 
பூஞ்சைகள் பாசிகளுடன் சேர்ந்து ஒன்றுக்கொன்று பயன்பெறக் கூடிய வகையில் இணைப்புயிரிகளாக வளர்கின்றன. எ.கா. லைக்கன்ஸ்
 
Lichen5465493518w3213.jpg
லைக்கன்ஸ்
பூஞ்சைகளின் வகைப்பாடு
பூஞ்சை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • மைக்சோமைசீட்ஸ்
  • யூமைசீட்ஸ் (உண்மையான பூஞ்சை)
பூஞ்சைகள்.png
Reference:
https://www.flickr.com/photos/bapujiarcot/3673816785/in/photolist-9n2xXa-tt9BK-P1ND4D-6ADgJH-5xBgWA-7PrSzo-8gpRLm-Pad5JD-5xwTB6-PPRDwY/
https://upload.wikimedia.org/wikipedia/commons/c/c8/Black_mold_%28rhizopus_sp%29.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/b/bf/Lichen_%285465493518%29.jpg