PDF chapter test TRY NOW

ஆஞ்சியோஸ்பெர்ம்கள்  விதைகள், பூக்கள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்யும் வாஸ்குலர் தாவரங்களை குறிக்கின்றன. கருப்பையில் அடைக்கப்பட்டுள்ள  விதைகளை  உருவாக்குவதன் மூலம் அவை இனப்பெருக்கம் செய்கின்றன.
ஆஞ்சியோ என்பதை பெட்டி அல்லது மூடிய பெட்டி என்றும், மேலும் ஸ்பெர்மா என்பது விதை எனப் பொருள்படும்.
வளரியல்பின் அடிப்படையில் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை:
  • சிறு செடிகள் (சொலனம் மெலாஞ்சினா - கத்தரிச் செடி)
  • புதர்ச்செடிகள் (ஹைபிஸ்கஸ் ரோசாசைனன்சிஸ் - செம்பருத்தி)
  • மரங்கள் (மாஞ்சிஃபெரா இன்டிகா - மாமரம்)
Design - YC IND (1).png
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சில எடுத்துக்காட்டுகள்
 
ஆஞ்சியோஸ்பெர்ம்கள் சிக்கலான வாஸ்குலர் அமைப்பு, பூக்கள் மற்றும் பழங்களை உருவாக்குவதன் மூலம் ஒரு சவாலான நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்றது. அவை விதைகளால் இனப்பெருக்கம் செய்யப்பட்டு நிலத்தில் விரைவாக பரவுகின்றன. இவற்றில் சைலம் மற்றும் ஃபுளோயம்  எனப்படும் நன்கு வளர்ச்சியடைந்த கடத்தும் திசுக்கள் காணப்படுகின்றன.
  
சைலம்:

                 1. சைலக் குழாய்கள்
                 2. டிரக்கீடு
                 3. சைலம் பாரன்கைமா
                 4. சைலம் நார்கள்
 
ஃபுளோயம்:

                 1. சல்லடைக்குழாய்
                 2. ஃபுளோயம் பாரன்கைமா
                 3. துணைசெல்கள்
                 4. ஃபுளோயம் நார்கள்
வகைப்பாடு
ஆஞ்சியோஸ்பெர்ம்கள் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • இருவிதையிலைத் தாவரங்கள் 
  • ஒருவிதையிலைத் தாவரங்கள்
Design - YC IND (9).png
ஒருவிதையிலை மற்றும் இருவிதையிலை தாவர ஒற்றுமை, வேற்றுமைகள்
  
இருவிதையிலைத் தாவரங்கள்:
  1. முளைக்கும் போது இரண்டு இலைகள் வெளியே வரும்.
  2. ஆணிவேர்த் தொகுப்பு கொண்டவை,
  3. வலைப்பின்னல் நரம்பமைவு உடையவை,
  4. நான்கு அல்லது ஐந்து அங்க மலர்கள் கொண்டவை,
  5. பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை  நடைபெறுகிறது. 
  6. எ.கா.அவரை, மாமரம், வேப்பமரம்
ஒருவிதையிலைத் தாவரங்கள்:
  1. முளைக்கும் போது ஒரே ஒரு இலை மட்டுமே வெளியே வரும்.
  2. சல்லி வேர்த் தொகுப்பு கொண்டவை,
  3. இணைப் போக்கு நரம்பமைவு உடையவை,
  4. மூன்று அங்கங்க மலர்கள் கொண்டவை .
  5. அல்லி மற்றும் புல்லி இதழ்கள் ஒரே வட்டத்தில் அமைந்திருக்கும்.
  6. காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
  7. எ.கா: புல் ,நெல்