
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo
எடுத்துக்காட்டு
ஒரு நபரின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். எனில், ஒரு நாளில் நபரின் தோராயமான இதயத் துடிப்பைக் கண்டறியவும்.
\text{நேரம் = 1 நாள்}
\text{இதய துடிப்பு விகிதம் = நிமிடத்திற்கு 72 துடிப்பு}
\text{தோராயமான இதய துடிப்பு = நேரம் × இதய துடிப்பு}
= 24 × 60 × 72
= 103680
எனவே, 1 நாளில் ஒரு நபரின் தோராயமான இதயத் துடிப்பு 103680 ஆகும்.
கணக்கீடுகளை மேற்கொள்வதற்கு பெரும்பாலும் கணிப்பான்களும், கணினிகளுமே தற்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் கிடைக்கப்பெறும் மதிப்பானது அதிக எண்ணிக்கையிலான இலக்கங்களைக் கொண்டிருக்கும். எனவே, இயற்பியலின் பல்வேறு துறைகளில் அதிக இலக்கங்களைக் கொண்டுள்ள இம்மதிப்புகளை முழுமையாக்கும் முறையானது பயன்படுத்தப்படுகின்றது.
முழுமையாக்கலுக்கான விதிகள்:
1. முழுமையாக்கப்படவேண்டிய எண்ணில் கடைசி இலக்கத்தைக் கண்டறிய வேண்டும். அடுத்த இலக்க எண் 5-ஐ விட பெரிய எண்ணாக இருப்பின் ஒன்றை கூட்ட வேண்டும்.
2. அதாவது, அந்த எண்ணிற்கு அடுத்த இலக்கத்தில் உள்ள எண்ணின் மதிப்பு 5 ஐ விடக் குறைவாக இருப்பின், அந்த எண்ணை மாற்ற வேண்டியதில்லை. (உதாரணமாக, இரண்டு இலக்கத்தில் முழுமைப்படுத்த வேண்டுமெனில் மூன்றாவது இலக்க எண்ணை எடுத்துக்கொள்ள வேண்டும்)
3. அடுத்த இலக்கத்தில் உள்ள எண்ணின் மதிப்பு 5 அல்லது 5ஐ விட அதிகமாக இருப்பின், முழுமையாக்கப்படவேண்டிய இலக்கத்தின் மதிப்பை ஒன்று அதிகரிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு -1:
1.344 என்ற எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்குக.
இரண்டு தசம இலக்கங்களுக்கு கொடுக்கப்பட்ட எண்ணை நாம் முழுமையாக்க வேண்டும்.
- முழுமையாக்கப் பட வேண்டிய எண்ணிற்கு அடுத்த எண் 4 ஆகும்
- இந்த எண்ணின் மதிப்பு 5ஐ விடக் குறைவாக இருப்பதால் முழுமையாக்கப் பட வேண்டிய எண்ணை மாற்ற வேண்டியதில்லை.
எனவே, சரியான மதிப்பு 1.34 ஆகும்.
எடுத்துக்காட்டு - 2:
1.456 என்ற எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்குக.
இரண்டு தசம இலக்கங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணை நாம் முழுமையாக்க வேண்டும்.
- முழுமையாக்கப் பட வேண்டிய எண்ணிற்கு அடுத்த எண் 6 ஆகும்.
- இந்த எண்ணின் மதிப்பு 5ஐ விட அதிகமாக இருப்பதால் முழுமையாக்கப் பட வேண்டிய இலக்கத்திலுள்ள எண்ணுடன் 1 ஐக் கூட்ட வேண்டும்.
எனவே, சரியானமதிப்பு 1.46 ஆகும்.