PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநீளம் என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூர வேறுபாடு என வரையறுக்கலாம்.
உதாரணமாக, உங்கள் உடல் உயரத்தை அளவிட விரும்பினால், உங்கள் தலைக்கும் கால்விரலுக்கும் இடையே உள்ள நீளத்தைக் கண்டறிய வேண்டும்.
நீளத்தின் \(SI\) அலகு மீட்டர் ஆகும். ஒளியானது வெற்றிடத்தில் \(1 / 29,97,92,458\) விநாடியில் கடக்கும் தூரமே ஒரு மீட்டர் எனப்படும்.
இதேபோல், தூரத்தை அளவிடவும் இந்த அடிப்படை அளவைப் பயன்படுத்துகிறோம். பொதுவாக, தூரத்தை சென்டிமீட்டர் அல்லது மீட்டரில் கணக்கிடுகிறோம். எனினும், தூரம் பெரியதாக இருந்தால், நாம் கிலோமீட்டரைப் பயன்படுத்துகிறோம்.
கடலில் உள்ள தூரத்தை எப்படி கணக்கிடுகிறோம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
கடலில் உள்ள தூரத்தை அளக்க கடல் மைல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
\(1\) மைல் \(=\) \(1.6\) கிலோமீட்டர்.
\(1\) கடல் மைல் \(=\) கடலில் \(1.852\) கிலோமீட்டர்.
மிகப்பெரிய தூரங்களை (எ.கா: வானியல் பொருள்களுக்கிடையேயான தூரங்கள்) அளவிட நாம் கீழ்க்கண்ட அலகுகளைப் பயன்படுத்துகிறோம்.
1. வானியல் அலகு
2. ஒளி ஆண்டு
3. விண்ணியல் ஆரம்
பெரிய அலகுகள் | மதிப்பு (மீட்டரில்) |
கிலோமீட்டர் \((km)\) | \(10^3\) மீ |
வானியல் அலகு \((AU)\) | \(1.496 × 10^11\) மீ |
ஒளி ஆண்டு | \(9.46 × 10^15\) மீ |
விண்ணியல் ஆரம் | \(3.08 × 10^16\) மீ |
சிறிய அலகுகள் | மதிப்பு (மீட்டரில்) |
ஃபெர்மி \((f)*\) | \(10^-15\) மீ |
ஆங்ஸ்ட்ரம் \((A°)\) | \(10^-10\) மீ |
நேனோமீட்டர் \((nm)\) | \(10^-9\) மீ |
மைக்ரான் (மைக்ரோமீட்டர் \(μm\)) | \(10^-6\) மீ |
மில்லி மீட்டர் \((mm)\) | \(10^-3\) மீ |
சென்டி மீட்டர் \((cm)\) | \(10^-2\) மீ |
[குறிப்பு: *\(SI\) அமைப்புக்கு வெளியே உள்ள அலகுகள் இன்னும் பயன்பாட்டிற்கு ஏற்கப்படுகிறது.]