PDF chapter test TRY NOW
வளிமண்டல அழுத்தத்தில் நமது அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் செய்கிறோம். நாம் அதை உணராதபடி மிகவும் பழகிவிட்டோம். கருவிகளைப் பயன்படுத்தி இரத்த அழுத்தம் மற்றும் டயர் ட்யூப்களில் உள்ள அழுத்தத்தை அளவிடும் போது, வளிமண்டல அழுத்தத்திற்கு அதிகமாக உள்ள அழுத்தத்தை குறிக்கின்றன.
எனவே, தனிச்சுழி அழுத்தம் என்பது முழுமையான வெற்றிடத்தைபூஜ்யக் குறிப்பாகக் கொண்டு கணக்கிடப்படுவதாகும்.
அளவி அழுத்தம் என்பது வளிமண்டல அழுத்தத்தை பூஜ்யக் குறிப்பாகக் கொண்டு கணக்கிடப்படுவதாகும்.
வளிமண்டல அழுத்தத்தை விட அதிகமான அழுத்தங்களுக்கு:
தனிச்சுழி அழுத்தம் \(=\) வளிமண்டல அழுத்தம் \(+\) அளவி அழுத்தம்
வளிமண்டல அழுத்தத்தை விட குறைவான அழுத்தங்களுக்கு:
தனிச்சுழி அழுத்தம் \(=\) வளிமண்டல அழுத்தம் \(–\) அளவி அழுத்தம்
திரவத்தம்பம் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம். அதனால் கடலுக்குள் அழுத்தம் அதிகமாக இருக்கும் (இது வளிமண்டல அழுத்தத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்).
நமது உடலின் பாகங்கள், குறிப்பாக இரத்த நாளங்கள் மற்றும் மென்மையான திசுக்கள், அத்தகைய உயர் அழுத்தத்தை தாங்க முடியாது. எனவே, ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் எப்போதும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிறப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை அணிவார்கள்.
ஆழ்கடல் நீச்சல் வீரர்
எரிபொருள் நிரப்பும் இடங்களில் வாகனங்களின் டயர் அழுத்தம் \(psi\) எனப்படும் அலகு மூலம் அளவிடப்படுகிறது. \(psi\) என்னும் அலகு ஒரு அங்குலத்தில் (\(inch\)) செயல்படும் ஒரு பாஸ்கல் அழுத்தம் ஆகும். இது அழுத்தத்தை அளக்கும் ஒரு பழமையான முறையாகும்.
டயர் அழுத்த அளவுகோல்
Reference:
https://www.hippopx.com/en/diving-underwater-water-underwater-world-sea-divers-coral-198959
https://pixahive.com/photo/tyre-pressure-gauge/