PDF chapter test TRY NOW
திரவமானி என்பது ஒரு திரவத்தின் அடர்த்தியை அல்லது ஒப்படர்த்தியை நேரடியாக அளப்பதற்குப் பயன்படும் உபகரணம் ஆகும். மிதத்தல் தத்துவத்தின் அடிப்படையில் திரவமானிகள் வேலை செய்கின்றன.
திரவமானி
ஒரு திரவத்தில் திரவமானியானது மூழ்கும் போது அதனால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடையானது திரவமானியின் எடைக்குச் சமமாக இருக்கும்.
திரவமானியானது மேற்பகுதியில் மெல்லிய குழாயையும் அடிப்பகுதியில் கோள வடிவத்தினாலான குடுவையையும் கொண்ட நீண்ட உருளை வடிவ தண்டைக் கொண்டுள்ளது.
குழாயின் அடிப்பகுதியானது பாதரசம் அல்லது காரீயக் குண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இது திரவமானியானது, மிதப்பதற்கும், திரவங்களில் செங்குத்தாக நிற்பதற்கும் உதவுகிறது. மேலே உள்ள மெல்லிய குழாயில் அளவீடுகள் உள்ளதால், திரவத்தின் ஒப்படர்த்தியை நேரடியாக அளக்க முடிகிறது.
திரவமானி
சோதிக்க வேண்டிய திரவத்தினை கண்ணாடிக் குடுவையில் நிரப்ப வேண்டும். அத்திரவத்தில் திரவமானியை மெதுவாக செலுத்தி, மிதக்கும் படி செய்ய வேண்டும்.
குழாயின் அளவீடுகள் திரவத்தின் மேற்பகுதியைத் தொடும் அளவு, திரவத்தின் ஒப்படர்த்தியாகும்.
பல்வேறு நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றபடி திரவமானிகளை அளவுத்திருத்தம் (calibration) செய்து பாலின் அடர்த்தியைக் கண்டறியும் பால்மானி (Lactometer), சர்க்கரையின் அடர்த்தியைக் கண்டறியும் சர்க்கரைமானி (Saccharometer) மற்றும் சாராயத்தின் அடர்த்தியைக் கணக்கிடும் சாராயமானி (Alcoholometer) போன்றவை உருவாக்கப்படுகின்றன.
Reference:
https://www.flickr.com/photos/taubinphoto/8670718166/