PDF chapter test TRY NOW
மைட்டாசிஸ்
- உடல் செல்களில் நிகழ்கிறது.
- வாழ்க்கை முழுவதும் வளர்ச்சியைத் தொடர பங்காற்றுகிறது.
- ஒரு பகுப்பை மட்டும் கொண்டது.
- இரு இருமய சேய் செல்கள் தோன்றுகின்றன.
- தாய் செல்களில் குரோமோசோம் எண்ணிக்கை உள்ளது போலவே சேய் செல்களிலும் ஒத்துக் காணப்படுகிறது \((2n)\).
- ஒத்த சேய் செல்கள் உருவாகின்றன.
மியாசிஸ்
- இனச் செல்களில் நிகழ்கிறது.
- குறிப்பிட்ட வயதில் இனச்செயல்பாடு மற்றும் கேமிட் உருவாக்கத்தில் பங்காற்றுகிறது.
- இரு பகுப்புகளைக் கொண்டது.
- நான்கு ஒருமய சேய் செல்கள் தோன்றுகின்றன.
- தாய் செல்களில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கையிலிருந்துபாதி அளவு \((n)\) சேய் செல்களில் குறைந்து காணப்படுகிறது.
- சேய் செல்கள் தாய் செல்களைப் போல் ஒத்திருப்பதில்லை மற்றும் பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் இடையிலுள்ள வேறுபாடுகள்
மியாசிஸ்ஸின் முக்கியத்துவம்
- மியாசிஸ் பகுப்பின் மூலம் நிலையான குரோமோசோம்களின் எண்ணிக்கை பராமரிக்கபடும்.
- குறுக்கே கலத்தல் நிகழ்வுதால் சிற்றினங்களுக்குள் மரபியல் வேறுபாடுகள் ஒரு தலைமுறையிலிருந்து மறு தலைமுறைக்கு கடத்தப்படும்.